பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வரும் எம்எல்ஏ.. அவரது மனைவியும் எம்எல்ஏ.. கர்நாடக சட்டசபைக்கு இது புதுசு!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமியும், அவரது மனைவி அனிதாவும் புதிய வரலாறு படைத்துள்ளனர். முதல்வரும், மனைவியும் சட்டசபை உறுப்பினர்களாக இருப்பது கர்நாடகத்தில் இதுவே முதல் முறையாகும்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த சட்டசபைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ராம்நகரா மற்றும் சென்னபட்னா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார்.

இதையடுத்து ராம்நகரா தொகுதியை ராஜினாமா செய்தார். அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டார். அபார வெற்றியும் பெற்றார்.

[நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே சறுக்கும் பாஜக.. கலக்கத்தில் மோடி - அமித் ஷா அன் கோ!]

தம்பதி சமேதராக

தம்பதி சமேதராக

முதல்வரும், அவரது மனைவியும் சட்டசபை உறுப்பினர்களாக இருப்பது கர்நாடக சட்டசபை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் சாதனை படைத்து விட்டனர் குமாரசாமியும், அனிதா குமாரசாமியும்.

இது 2வது முறை

இது 2வது முறை

குமாரசாமியும், அனிதாவும் இணைந்து எம்எல்ஏக்களாக இருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ராமநகரா எம்எல்ஏவாக குமாரசாமி இருந்தபோது மதுகிரி எம்எல்ஏவாக அனிதா இருந்துள்ளார். ஆனால் அப்போது குமாரசாமி முதல்வராக இல்லை.

அபாரமாக வென்ற காங். கூட்டணி

அபாரமாக வென்ற காங். கூட்டணி

கர்நாடகத்தில் ராமநகரா, ஜாம்கண்டி ஆகிய இரு சட்டசபைத் தொகுதிகள், பல்லாரி, மண்டியா, சிவமோக்கா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் பல்லாரி, மண்டியா தொகுதிகளைக் கைப்பற்றினர். அதேபோல ராமநகரா, ஜாம்கண்டி தொகுதிகளையும் அபாரமாக வென்றனர். சிவமோக்கா மட்டும் பாஜகவுக்குப் போனது.

மஜதவுக்கு டபுள் கொண்டாட்டம்

மஜதவுக்கு டபுள் கொண்டாட்டம்

4-1 என்ற வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியுடன் ஒப்பிட்டு கர்நாடக மதச்சார்பற்ற ஜனதாதளத்தினர், காங்கிரஸார் கொண்டாடி வருகின்றனர். குமாரசாமி, அனிதா தம்பதியின் சட்டசபை சாதனையை தனியாக மதச்சார்பற்ற ஜனதாதளத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.

English summary
Karnataka CM Kumaraswamy and his wife Anitha Kumaraswamy have scripted a new record in the state Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X