பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபரப்பு.. பெண் கவுன்சிலரின் கையை பிடித்து இழுத்த பாஜகவினர்.. கொதித்தெழுந்த கர்நாடக காங்கிரஸ்..!

பெண் கவுன்சிலர் மீது நடத்திய தாக்குதலுக்கு டிகே சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

பெங்களூரு: "இது பாஜகவின் கலாசாரம்.. யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பழக்கத்தை அக்கட்சியினர் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்... பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் பெண் கவுன்சிலரை கையை பிடித்து இழுத்த விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுரா புரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்து முடிந்தது.. அப்போது அங்கு ஏராளமான பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சூழ்ந்திருந்தனர்.

 Attack on a female Councilor by BJP leaders in Karnataka

ஒருகட்டத்தில் அவர்கள் 2 இரு தரப்பினரிடையே மோதலும் ஏற்பட்டது.. அதில், காங்கிரஸ் பெண் கவுன்சிலர் சவிதா என்பவரை, பாஜகவை சேர்ந்த சித்து சவதி எம்எல்ஏ கையை பிடித்து இழுத்துள்ளார்... இதுதான் சர்ச்சையாக உருவெடுத்தள்ளது.

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது கண்டனத்தை தெரிவித்து, செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பாகல்கோட்டை மகாலிங்கபுரா புரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்து முடிந்தது.. இதில் காங்கிரஸ் கவுன்சிலர் சவிதா ஹுரகட்லி என்பவரும் போட்டியிட்டார்.

அவரை பாஜகவை சேர்ந்த சித்து சவதி எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் தாக்கி உள்ளனர்.. இது பாஜகவின் கலாசாரம்.. யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பழக்கத்தை அக்கட்சியினர் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்... பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஷாக்.. நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள்.. அதிர்ச்சியில் உறைந்துள்ள பீகார் கட்சிகள் ஷாக்.. நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள்.. அதிர்ச்சியில் உறைந்துள்ள பீகார் கட்சிகள்

வேறு வேறு சம்பவங்கள் என்றால், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்கிறார்கள்... ஆனால் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியபோது போலீசார் அங்குதான் இருந்திருக்கிறார்கள்.. அவர்களின் கண்முன்னேதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஆனாலும், போலீசார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

போலீசார் என்னதான் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்கிறோம்... அந்த நடவடிக்கைக்கு பிறகு நாங்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தை முதலமைச்சருக்கே விட்டுவிடுகிறேன்" என்று டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

English summary
Attack on a female Councilor by BJP leaders in Karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X