பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா... 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல பங்கேற்பு!

Google Oneindia Tamil News

பெங்களூர்: கொரோனா வைரஸ் பாதிப்பால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்திய முதல்வர் பிஎஸ் எடியூரப்பா கர்நாடக மாநிலம் பெலகாவியில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் பாதிப்பு... கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது

    கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 100 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இதுவரை 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போல் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளும் பொது நிகழ்ச்சிகளும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா எதிரொலி- ஷாஹின் பாக் பாணி போராட்டங்களை தவிர்க்க பேரா. காதர் மொகிதீன் வேண்டுகோள் கொரோனா எதிரொலி- ஷாஹின் பாக் பாணி போராட்டங்களை தவிர்க்க பேரா. காதர் மொகிதீன் வேண்டுகோள்

    முககவசம்

    முககவசம்

    எனினும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து திருமண கூடங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பலரும் முக கவசம் அணிந்து கொண்டு வந்திருந்தனர்.

    எம்எல்சி மகள் திருமணம்

    எம்எல்சி மகள் திருமணம்

    இந்த நிலையில் பாஜக எம்எல்சி மஹன்தேஷ் கவட்கிமாத்தின் மகளின் திருமணம் நேற்றைய தினம் பெலகாவியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    2000 பங்கேற்பு

    2000 பங்கேற்பு

    இவருடன் உடுப்பி-சிக்மக்ளூரு எம்பி ஷோபா கரந்தலாஜே, மாநில உள்துறை அமைச்சர் பவசராஜ் பொம்மை உள்ளிட்டோரும் கலந்து கொண்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்திய எடியூரப்பா தற்போது 2000 பேர் கலந்து கொண்ட திருமண விழாவில் பங்கேற்றது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

    அன்புத் தொல்லை

    அன்புத் தொல்லை

    இதுகுறித்து அவர் கூறுகையில் திருமணத்திற்கு போக வேண்டாம் என தான் நினைத்தாகவும் அவருடன் இருந்த எம்பி, எம்எல்ஏக்கள் வருமாறு அன்பு தொல்லையினால் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதை விட்டுவிட்டு பள்ளிக் குழந்தை போல் சாக்கு போக்கு சொல்வதாக மக்கள் விமர்சித்துள்ளனர்.

    English summary
    Karnataka CM B.S. Yediyurappa ignores his Corona advice and participates in wedding event.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X