பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமாரசாமிக்கு ஷாக்கிங் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முடிவு

Google Oneindia Tamil News

பெங்களூர்: குமாரசாமியின் அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ முடிவு செய்துள்ளது.

கர்நாடகத்தில் அரசியல் களம் கடந்த சில நாட்களாக சூடுபிடித்துள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ்- மஜத ஆட்சி மீது அதிருப்தி காரணமாக அக்கட்சிகளைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து 15 பேரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். அங்கு சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், 15 பேரையும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்தது.

சிசிலி தீவில் வெடித்து சிதறிய மவுண்ட் எட்னா எரிமலை.. 2 முக்கிய விமான நிலையங்கள் மூடல்சிசிலி தீவில் வெடித்து சிதறிய மவுண்ட் எட்னா எரிமலை.. 2 முக்கிய விமான நிலையங்கள் மூடல்

காங்.- மஜத

காங்.- மஜத

இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி சபாநாயகரின் உத்தரவுபடி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து காங்கிரஸ்- மஜத சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

அதாவது சட்டசபை விவகாரத்தில் தலையிட கூடாது. அவ்வாறிருக்கையில் எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என்பதை மட்டும் உச்சநீதிமன்றம் ஏன் கூறியது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று ஆளும் கட்சி கோரியுள்ளது.

எம்எல்ஏ மகேஷ்

எம்எல்ஏ மகேஷ்

இந்த நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என கூறும் நிலையில் கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மகேஷ் முடிவு செய்துள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அக் கட்சி தலைவர் மாயாவதியின் உத்தரவின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு புறக்கணிப்பை அவர் முடிவு செய்துள்ளார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக இருந்த மகேஷின் முடிவு ஆளும் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Bagujan Samaj Party MLA boycotts trust vote in Karnataka as his party leader asked him to do so.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X