பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆயுஷ் மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி - தீவிரமடையும் அலோபதி மருத்துவர்கள் போராட்டம்

ஆயுஷ் மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கர்நாடகா முழுவதும் உள்ள அலோபதி மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஆயுஷ் மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக கர்நாடகாவில் அலோபதி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து பிப்ரவரி 14ஆம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

அலோபதி மருத்துவ முறையில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேதா, சித்தா, யுனானி டாக்டர்கள் உரிய பயிற்சி பெற்று மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Ban Mixopathy : Allopathy doctors intensify protest against Ayush surgeon

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அலோபதி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு தழுவிய அளவில் அனைத்து மருத்துவ சங்க கூட்டமைப்பு சார்பில் 2 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. நாகர்கோவில், ஈரோட்டில் கடந்த வாரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக பள்ளிக்கல்வியிலும், மருத்துவ படிப்பிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த தேசிய கல்வி கொள்கையின் மூலமாக ஆயுஷ் மருத்துவமுறையை பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்களுடைய விருப்பம் போல் அலோபதி மருத்துவ முறையை பயின்று கொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு மருத்துவ துறையை கலப்படம் செய்வதற்கு ஒப்பாகும். இதன் மூலமாக அலோபதி மருத்துவர்கள் மட்டுமல்லாது ஆயுஷ் மருத்துவர்களும் பாதிக்கப்படுவார்கள் . அலோபதி மருத்துவ முறையில் குறைந்தபட்சம் ஐந்தரை ஆண்டுகள் இளநிலை எம்.பி.பி.எஸ். படிப்பும், அதைச் சார்ந்த கட்டாய ஒரு வருட மருத்துவ மாணவர்கள் அறுவை சிகிச்சை பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர். அதற்கு பிறகு 3 வருட முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பயிற்சிக்கு பிறகே அறுவை சிகிச்சை செய்திட இயலும்.

மருத்துவ முறையில் கலப்படம் செய்தால் அது மிகப்பெரிய குழப்பத்துக்கும், சீர்கேடுக்கும் வழிவகுக்கும். எனவே மக்கள் நலன் கருதி அரசு இந்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்திலும் கர்நாடகாவிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் மருத்துவர்களின் போராட்டம் 11வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு தனது அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து கூறியுள்ள இந்திய தோல் மருத்துவர்கள், வெனிரியாலஜிஸ்டுகள் மற்றும் தொழுநோயாளிகள் சங்கத்தின் (ஐஏடிவிஎல்) கர்நாடக மாநில தலைவர் டாக்டர் சஷிகுமார் பி எம், அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலமாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்காக எந்த ஒரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதனால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவ முறையில் கலப்படம் செய்தால் அது மிகப்பெரிய குழப்பத்துக்கும், சீர்கேடுக்கும் வழிவகுக்கும். எனவே மக்கள் நலன் கருதி அரசு இந்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, திரும்ப பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Allopathic doctors in Karnataka are fighting against the announcement that AYUSH doctors can also perform surgery. They have condemned the announcement of the central government and announced that they will intensify the struggle from February 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X