பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காட்டு தீ போல பரவும் கொரோனா.. பிரதமரே பாராட்டிய பெங்களூர் நிலைமை இப்போ மோசம்.. மும்பையை தாண்டியது

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜூன் இறுதி வரை இந்தியாவின் மிகக் குறைவான கொரோனா பாதிப்பை பதிவு செய்த பெங்களூர், இப்போது நாட்டின் மூன்றாவது மோசமான நிலையில் உள்ளது.

பெங்களூரில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கேஸ்கள் எண்ணிக்கை மும்பையை விட அதிகமாக உள்ளது. புனே மற்றும் டெல்லியை தொடர்ந்து பெங்களூர் மூன்றாவது இடத்தில், மோசமான நிலையில் உள்ளது.

பெங்களூரில் இப்போது 1.7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை கொண்ட நகரமான மும்பையில் தற்போது 1.69 லட்சம் அளவுக்கு கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

கோவையில் தொடர்ந்து உச்சம்.. தமிழகத்தில் இன்று 5,752 பேருக்கு கொரோனா.. மொத்தமாக 508511 பேர் பாதிப்புகோவையில் தொடர்ந்து உச்சம்.. தமிழகத்தில் இன்று 5,752 பேருக்கு கொரோனா.. மொத்தமாக 508511 பேர் பாதிப்பு

பெங்களூரில் கொரோனா

பெங்களூரில் கொரோனா

கர்நாடகாவில் ஜூலை மாதத்திலிருந்தே கொரோனா பெரிய அளவில் அதிகரிக்க தொடங்கியது. ஜூன் மாத இறுதியில், பெங்களூரில் சுமார் 4,500 கேஸ்கள் உறுதி செய்யப்பட்டன, மும்பை 80,000 ஐ நெருங்கியது. பிரதமர் மோடி கூட, இதற்காக கர்நாடக அரசை பாராட்டினார். ஆனால் அதன்பிறகு பெங்களூரில் கொரோனா பரவல் மிக வேகமாக இருந்தது.

பெங்களூரில் 40% கேஸ்கள்

பெங்களூரில் 40% கேஸ்கள்

கர்நாடகாவில் மொத்தமுள்ள 4.59 லட்சம் கொரோனா கேஸ்களில் 40 சதவீதம் கேஸ்கள், பதிவாகியுள்ளது பெங்களூரில்தான். கடந்த சில நாட்களாக, பெங்களூர் தினமும் 3,500 கேஸ்களை பதிவு செய்து வருகிறது. புனே மற்றும் டெல்லி மட்டுமே இதைவிட அதிகமான தினசரி கேஸ்களை கொண்டுள்ளது.

மும்பை நிலவரம்

மும்பை நிலவரம்

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில், மும்பையில் தினசரி புதிய கேஸ்கள் 1,000 க்கும் கீழே குறைந்துவிட்டன, ஆனால் அதன் பின்னர் அது அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வாரம், 2,371 ஐ எட்டியது. இருப்பினும், பெங்களூர் அதைவிட அதிகமான கேஸ்களை பதிவு செய்து வருகிறது.

சென்னை முன்னேற்றம்

சென்னை முன்னேற்றம்

சென்னையில் கொரோனா அதிகமாக பரவியபோது, குறைவான கொரோனா நோயாளிகளை பதிவு செய்தது பெங்களூர் நகரம். இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா கேஸ்களை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bengaluru, has now emerged as the city with the third-highest caseload in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X