பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூரில் ஷாக்கிங்.. 94 கிமீ சாலை போட இவ்வளவு செலவா? சந்திரயான் 2ன் செலவை தாண்டிய பட்ஜெட்!

சந்திரயான் 2வை உருவாக்குவதற்கு ஆன செலவை விட பெங்களூரில் சாலை போட அதிக அளவில் செலவு ஆகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: சந்திரயான் 2வை உருவாக்குவதற்கு ஆன செலவை விட பெங்களூரில் சாலை போட அதிக அளவில் செலவு ஆகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சந்திரயான் 2 நிலவை நோக்கி கடந்த ஜூலை மாதம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் வேகமாக நிலவில் தரையிறங்கிவிட்டாலும் கூட அதனுடன் இன்னும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

பொதுவாக நாசா, ரஷ்யா அனுப்பும் ராக்கெட்டுகள் எல்லாம் நேராக நிலவை நோக்கி நேரடியாக செல்லும். ஆனால் சந்திரயான் 2 மட்டும்தான் பூமியை சுற்றி வேகம் எடுத்து அதன்பின் பின் நிலவை நோக்கி சென்றது.

என்ன காரணாம்

என்ன காரணாம்

இதற்கு காரணம் எரிபொருள் தேவை குறையும். அதேபோல் செலவு மிச்சம். இந்த மொத்த சந்திராயன் 2 திட்டத்தை முடிக்க 940 கோடி ரூபாய்தான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் சந்திரயான் 2 மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டையும் சேர்த்து 960 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கடும் உழைப்பு

கடும் உழைப்பு

கடந்த 2 வருடங்களில் மிக கடுமையான உழைப்பை போட்டு சந்திரயான் 2வை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். பணியாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்து இந்த சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சாலை

என்ன சாலை

இந்த நிலையில்தான் சந்திரயான் 2வை உருவாக்குவதற்கு ஆன செலவை விட பெங்களூரில் சாலை போட அதிக அளவில் செலவு ஆகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆம் பெங்களூர் மாநகராட்சி கடந்த 2016ம் வருடம் பெங்களூர் நகருக்குள் சாலை போட 972 கோடி செலவு செய்துள்ளது.

மிக அதிகம்

மிக அதிகம்

வெறும் 94 கிமீ தூரத்திற்கு சாலை போட 972 கோடியை செலவு செய்துள்ளது. அதன்படி ஒரு கிமீ சாலைக்கு 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது . பொதுவாக புதிய சாலை போட 4 கோடிதான் அதிகமாக ஒரு கிமீ தூரத்திற்கு செலவு ஆகும். ஆனால் பெங்களூரில் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக செலவு

கூடுதலாக செலவு

இது சந்திரயான் 2 திட்டத்தை விட 30 கோடி ரூபாய் கூடுதல் பட்ஜெட் ஆகும். 2016ல் இந்த சாலை திட்டம் பெங்களூரின் என்சிசி மற்றும் மதுகான் புராஜெக்ட்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு வழக்கப்பட்டது. அவர்கள்தான் இவ்வளவு பணத்தை சாலைக்காக செலவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்

படம்

அதேபோல் சந்திரயான் 2 பட்ஜெட் ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட குறைவாகும். 1700 கோடி ரூபாயில் அவதார் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி படமாக அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் 2300 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டது. அதேபோல் அவதார் தொடரின் அடுத்த படமான அவதார் 2 படம் 3200 கோடி ரூபாய் செலவில் தயார் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்

சூப்பர்

இப்படி சாலை போடும் பணியை விடவும். ஹாலிவுட் படங்களை விடவும் குறைவான செலவில் சந்திரயான் 2 தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த குறைவான பட்ஜெட்டில் சந்திரயான் 2 99% வெற்றிபெற்றுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திரயான் 2விற்கு பின் கடும் உழைப்பை போட்டு இவ்வளவு குறைந்த செலவில் சாதனை செய்த இஸ்ரோவிற்கு சல்யூட்!

English summary
Bangalore city road project budget breaches Chandrayaan 2 total budget - Shocking Report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X