பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை எப்படி தடுக்கிறார்கள் பாருங்க.. பெங்களூர் மாநகராட்சி செய்த வேலை.. அப்படியே ஷாக்கான மக்கள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகரில், தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் அறிவியல்பூர்வமாக பின்பற்றப்படாமல், தொல்லை கொடுக்கும் விதமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த புகைப்படம் பெரிய சாட்சி.

பெங்களூரில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தினசரி 2000த்திற்கும் குறைவில்லாமல் புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

எனவே வீட்டு தனிமைப்படுத்துதலில் மிகுந்த கடுமை காட்ட ஆரம்பித்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். ஆனால் அதற்காக இப்படியா செய்வது?

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.. இணை நோய்கள் இல்லாத 11 பேர் பலி.. இளம் வயது மரணங்களும் அதிகரிப்புதமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.. இணை நோய்கள் இல்லாத 11 பேர் பலி.. இளம் வயது மரணங்களும் அதிகரிப்பு

படம்

படம்

இதுதொடர்பாக ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் சதீஷ் சங்கமேஸ்வரன் என்பவர். தனது பில்டிங்கிலுள்ள இரு வீடுகளின் முன்பாக தகர கேட் வைத்து சீல் வைக்கப்படுவது போன்ற புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார். கதவை ஒட்டி இப்படி தகர கேட் வைக்கப்பட்டுள்ளது. அந்த இரு வீட்டில் இருப்பவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்த இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசர தேவை

அவசர தேவை

ஒரு வீட்டில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்களாம், மற்றொரு வீட்டில், வயது முதிர்ந்த கணவன்-மனைவி வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டுக் கதவை திறந்து வெளியே வர முடியாத அளவுக்கு தகர கேட்டு வைத்து பூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை பதிவு செய்துள்ள சதீஷ், ஒரு அவசர தேவை என்றால், உதாரணத்திற்கு தீ விபத்து போன்ற ஏதாவது ஏற்பட்டுவிட்டால் இந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி அவசரமாக வெளியே வர முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநகராட்சி கமிஷனர்

மாநகராட்சி கமிஷனர்

கொரோனாவைவிட விட இந்த கேட் மற்றும் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து, பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. பலரும் மாநகராட்சி கமிஷனரின் டுவிட்டர் கணக்கை டேக் செய்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனரை உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீக்கம்

நீக்கம்

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு இந்த தகவல் வந்ததுமே அதிகாரிகளை அனுப்பி கேட் நீக்கப்பட்டது. கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் சிலர் இந்த தவறை செய்து விட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளார். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

Recommended Video

    300 கிமீ வேகத்தில் சீறிப் பாய்ந்த பைக்.. மொத்தமாக தூக்கிய Bangalore police
    சென்னையை பார்த்து சூடு

    சென்னையை பார்த்து சூடு

    சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு வெளியில் கேட் பகுதியில், தகரம் பொருத்தப்படுகிறது. இதை பார்த்ததும் அந்த வீட்டுக்கு செல்லக்கூடிய மக்கள் அதை தவிர்ப்பார்கள். ஆனால் இதுவரை தகர கேட் வைக்கும் பழக்கம் பெங்களூரில் கிடையாது. இப்போது புதிதாக இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை எங்கே வைப்பது என்று தெரியாமல் வீட்டு கதவையே அடைத்து விட்டார்கள் என்கிறது மாநகராட்சி வட்டாரம்.

    English summary
    Bangalore corporation staffs made a blunder by placing a gate and sealing 2 houses, this picture goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X