பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடுரோட்டில் அரசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக 40 பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.. நடந்தது என்ன?

    தலைநகர் பெங்களூரில் மெஜஸ்டிக்கிலிருந்து தீபாஞ்சலி நகர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அப்போது அந்த பேருந்தில் இருந்து கரும்புகை வந்ததை ஓட்டுநர் கவனித்துவிட்டார். உடனே பதறாமல் கீழே போய் பார்த்தார்.

    'புஷ்பா' படத்தை பார்த்து இளைஞரை கொலை செய்த 3 சிறுவர்கள்.. காரணம் கேட்டு ஆடிப்போன போலீஸ்! 'புஷ்பா' படத்தை பார்த்து இளைஞரை கொலை செய்த 3 சிறுவர்கள்.. காரணம் கேட்டு ஆடிப்போன போலீஸ்!

    அப்போது முன்பக்க என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர், பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு தெரிவித்தார்.

    தீயணைப்புத் துறை

    தீயணைப்புத் துறை

    மேலும் எந்தவித பதற்றமும் இல்லாமல் இறங்குமாறு அறிவுறுத்தினார். இதனிடையே என்ஜினில் பற்றிய தீ பேருந்து முழுவதும் பரவியதால் பேருந்து எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

    பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியம்

    பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியம்

    இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பேருந்து ஓட்டுநருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2020 இல் தனியார் பேருந்து தீவிபத்து

    2020 இல் தனியார் பேருந்து தீவிபத்து

    கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலியாகியிருந்தனர். கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. கே.ஆர். ஹல்லி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது இன்ஜின் கோளாறு காரணமாக பேருந்தில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

    பழைய விபத்து

    பழைய விபத்து

    அது போல் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து மும்பைக்கு சொகுசு பேருந்து ஒன்று 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையோர தடுப்பில் பேருந்து மோதியதில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். மேலும், 40 பேர் காயமடைந்தனர்.

    English summary
    Bangalore Government bus caught fire today. 40 passengers escaped from this tragedy luckily.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X