பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பேஸ்புக் போஸ்ட்.. பெங்களூரில் சூறையாடப்பட்ட எம்எல்ஏ வீடு.. 3 பேர் பலி.. பரபரப்பு.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஒரு பேஸ்புக் போஸ்ட் காரணமாக பெங்களூரில் இருக்கும் இரண்டு பகுதிகளில் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீடு சூறையாடப்பட்டு அங்கு துப்பாக்கி நடத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    பெங்களூர் கலவரம்.. நள்ளிரவில் என்ன நடந்தது?

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் புலிகேசி நகரை சேர்ந்தவர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி. இவரின் வீடு பெங்களூரில் இருக்கும் காவல் பைசந்திரா என்ற பகுதியில் இருக்கிறது. இவர் வீடு மீதுதான் நேற்று இரவு வன்முறையாளர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    இந்த வன்முறைக்கு பின் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக் போஸ்ட்தான் காரணம் என்கிறார்கள். இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை இவர் போஸ்ட் செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு: எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி வீடு சூறை- வாகனங்கள் தீக்கிரை- துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலிபெங்களூரு: எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி வீடு சூறை- வாகனங்கள் தீக்கிரை- துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

    பேஸ்புக் போஸ்ட்

    பேஸ்புக் போஸ்ட்

    நவீன் செய்த பேஸ்புக் போஸ்ட் குறித்து முதலில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் இந்த புகாரை எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்ய முடியாது. நீங்கள் இதை பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று போலீசார் அவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.

    மக்கள் கோபம்

    மக்கள் கோபம்

    இதையடுத்து கோபம் அடைந்த மக்கள் அந்த போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கிருந்த பைக்குகள், போலீஸ் வாகனங்களை கற்களால் அடித்து நொறுக்கி உள்ளனர். போலீஸ் நிலையம் மீது சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீசாரின் பைக்குகள் மீது தீ வைத்து இருக்கிறார்கள். 1000 பேர் போலீஸ் நிலையம் வெளியே கூடியதாக கூறப்படுகிறது.

    எம்எல்ஏ வீடு

    எம்எல்ஏ வீடு

    இந்த நிலையில் இன்னொரு பக்கம் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீடு மீதும் வன்முறையாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர். எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீடு முன் கூடிய வன்முறையாளர்கள் அவரின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதலை நடத்தினார்கள். சரமாரியாக அவரின் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். 300க்கும் அதிகமானோர் சென்று தாக்குதல் அவரின் வீடு மீது நடத்தினார்கள்.

    கலவரம் எப்படி

    கலவரம் எப்படி

    இது பெரிய கலவரமாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் அங்கு வந்த தீயணைப்பு வாகனங்களையும் இந்த வன்முறையாளர்கள் குழு உள்ளே விடவில்லை. நாங்கள் தீயணைப்பு வாகனத்தை எடுத்து வந்தோம். ஆனால் வன்முறையாளர்கள் எங்களை உள்ளே விடவில்லை. எங்கள் வாகனம் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் நாங்கள் திரும்பி செல்ல வேண்டியதாகிவிட்டது என்று தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளார்.

    துப்பாக்கி ஸோஸோடு

    துப்பாக்கி ஸோஸோடு

    இந்த வன்முறையாளர்கள் மீது முதலில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தி கலைக்க முயன்று உள்ளனர். ஆனால் வன்முறையாளர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பிக்கி சூட்டில் 3 பேர் பலியானதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்டார்

    கைது செய்யப்பட்டார்

    இன்னொரு பக்கம் இந்த வன்முறையை தொடர்ந்து எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். நவீனிடம போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னுடைய பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக நவீன் விளக்கம் அளித்துள்ளார். இதுவரை இந்த வன்முறை தொடர்பாக 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    English summary
    Bangalore MLA Srivasa Murthy home vandalized by goons over a Facebook post, 2 killed in a police firing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X