பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு.. பெங்களூரில் கண் டாக்டர் அதிரடி கைது

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஐஎஸ் கோரசன் மாகாண வழக்கு தொடர்பாக பெங்களூரில் பணிபுரிந்த கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான் என்ற 28 வயது இளைஞர், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு.. பெங்களூரில் கண் டாக்டர் அதிரடி கைது

    பெங்களூரு, பசவனகுடியில் வசித்தபடி, எம்.எஸ். ராமையா மருத்துவமனையில், கண் மருத்துவராக பணியாற்றி வந்தார் என்று, என்.ஐ.ஏ தெரிவித்தது.

    Bangalore ophthalmologist accused of furthering ISIS cause arrested by NIA

    ஆனால், எம்.எஸ்.ராமையா தனது அறிக்கையில், ரஹ்மான் தங்கள் கல்லூரியில் கண் மருத்துவம் துறையில் முதுகலை மாணவர் என்று கூறியுள்ளது.

    "எங்கள் பதிவுகளின்படி, அவர் 2014 ஆம் ஆண்டில் பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்றார், கர்நாடக தேர்வு ஆணையத்திடம் ஒதுக்கீடு மூலம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2017 இல் எங்கள் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி வளாகத்திற்கு வெளியே அவரது செயல்பாடுகளை கவனிக்கவில்லை "என்று எம்.எஸ்.ராமையா மருத்துவக் கல்லூரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    சீனாவுடன் டென்ஷன் ஒருபக்கம்.. திடீரென பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் போர் விமானங்களை குவித்த இந்தியாசீனாவுடன் டென்ஷன் ஒருபக்கம்.. திடீரென பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் போர் விமானங்களை குவித்த இந்தியா

    டெல்லியிலுள்ள ஜாமியா நகரில் உள்ள ஓக்லா விஹாரில் வசித்து வந்த ஜஹான்சைப் சாமி வாணி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் ஆகிய காஷ்மீரைச் சேர்ந்த தம்பதியினரை என்.ஐ.ஏ கைது செய்து விசாரித்த நிலையில், அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், அப்துர் ரஹ்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.

    "​​கைது செய்யப்பட்ட ரஹ்மான், குற்றம் சாட்டப்பட்ட சாமி மற்றும் சிரியாவைச் சேர்ந்த பிற ஐ.எஸ்.ஐ.எஸ் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்தார். போரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவும் குழுவில் இருந்தார்" என்று என்ஐஏ செய்தித் தொடர்பாளர் சோனியா நாரங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Abdur Rahman, an ophthalmologist working in Bengaluru has been arrested in connection with an Islamic State Khorasan Province Case has been arrested by the National Investigation Agency (NIA). He is a resident of Basavangudi, Bengaluru and is working as an Ophthalmologist at M.S. Ramaiah Medical College, Bangalore, the NIA said in a note.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X