பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கும் கிடைக்காத விலை.. ரூ.150 -க்கு மட்டன் பிரியாணி.. 1 கி.மீ.தூரம் காத்திருந்த அசைவ பிரியர்கள்..

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் ஹோஸ்கோட்டேவில் மட்டன் பிரியாணி மிக குறைந்த விலையில் விற்கப்படுவதால் அசைவப் பிரியர்கள் காலை முதலே வரிசை கட்டி நின்று அதனை வாங்கிச்செல்கின்றனர்.

Recommended Video

    எங்கும் கிடைக்காத விலையில் பிரியாணி.. 1 கி.மீ.தூரம் காத்திருந்து வாங்கும் அசைவ பிரியர்கள் - வீடியோ

    பெங்களூரு மாநகரில் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படும் மட்டன் பிரியாணி ஹோஸ்கோட்டே பகுதியில் மட்டும் ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கு காரணம் அங்கு பிரியாணிக்கென்றே பிரத்யேகமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகள் வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைக்கின்றனர் கடை நிர்வாகத்தினர்.

    ஹத்ராஸ் சம்பவம்: பெண்களுக்கு நல்ல பண்பை சொல்லி கொடுங்க.. நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பாஜக எம்எல்ஏ ஹத்ராஸ் சம்பவம்: பெண்களுக்கு நல்ல பண்பை சொல்லி கொடுங்க.. நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பாஜக எம்எல்ஏ

    மட்டன் பிரியாணி

    மட்டன் பிரியாணி

    தமிழகத்தில் எப்படி ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி என பிரபலமோ அதேபோல் கர்நாடகாவில் ஹோஸ்கோட்டே பிரியாணி என்பது பிரபலமாகி வருகிறது. பெங்களூருவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஹோஸ்கோட்டேவில் பிரியாணிக்கென்ற 10-க்கும் மேற்பட்ட கடைகள் பிரத்யேகமாக இயங்கி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சலுகைகளை அள்ளி வீசி வருகின்றன பிரியாணி கடைகள்.

    பிரியாணி பிரியர்கள்

    பிரியாணி பிரியர்கள்

    பிரியாணி பிரியர்களின் புகலிடமாக விளங்கும் ஹோஸ்கோட்டேவில் மட்டன் பிரியாணி ரூ.150-க்கும், ஆட்டுக்கால் பாயா ரூ.50-க்கும் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது. பெங்களூருவில் இருந்து கார், டூவிலர் என அசைவ பிரியர்கள் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். வேலைநாட்களான திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களை விட வார விடுப்பு நாட்களான சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கட்டி ஏறுகிறது.

     வரிசையில் நின்று

    வரிசையில் நின்று

    காலை முதலே ஒரு கிலோ மீட்டர் முதல் ஒன்றரை கிலோ மீட்டர் வரை பிரியாணி பிரியர்கள் கால் கடுக்க வரிசையில் நின்று தங்களுக்கு விருப்பமான பிரியாணியை வாங்கிச்செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த பிரியாணி கடைகள் இப்போது திறக்கப்பட்டுள்ளதால் இந்தளவு கூட்டம் கூடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

     என்ன விசேஷம்?

    என்ன விசேஷம்?

    ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் அளவுக்கு அந்த பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று பார்த்தால், அது தமிழக பிரியாணி ஸ்டைலில் தம் பிரியாணியாக தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் வழங்கப்படுவதை போல் பிரியாணியுடன் தயிர் பச்சடியும், முட்டை கிரேவியும் தரப்படுகிறது. இந்த பிரியாணியை சுவைப்பதற்காக பென்ஸ் கார்களில் கூட பெங்களூருவில் இருந்து ஹோஸ்கோட்டே செல்பவர்கள் ஏராளம்.

    English summary
    Bangalore People long queue for 150 Rs Mutton biryani
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X