பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவிற்கு இடையிலும் 26வது இடம்.. உலக அளவில் மிகப்பெரிய சாதனை.. வேகமாக முன்னேறும் பெங்களூர்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: உலக அளவில் நியூயார்க், லண்டன் போன்ற பெருநகரங்கள் கூட மிக மோசமான பொருளாதார சரிவை சந்தித்து இருக்கும் போது பெங்களூரில் வீடுகளின் மதிப்பு உயர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளது. அதேபோல் கொரோனா காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கு இந்தியாவின் பொருளாதரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது .

இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமின்றி உலக அளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்து இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரம், நில மதிப்பு, எண்ணெய் மார்க்கெட் என்று எல்லாம் சரிந்துள்ளது.

தோனி ஓய்வு.. அதென்ன ராஞ்சிக்கு மட்டும்.. இந்தியாவுக்கே தரலாமே.. நெட்டிசனுக்கு ஜொமாட்டோ கிண்டல் பதில்தோனி ஓய்வு.. அதென்ன ராஞ்சிக்கு மட்டும்.. இந்தியாவுக்கே தரலாமே.. நெட்டிசனுக்கு ஜொமாட்டோ கிண்டல் பதில்

 வீடு மதிப்பு

வீடு மதிப்பு

முக்கியமாக வீடுகளின் மதிப்பு கடந்த அரையாண்டில் மிக மோசமான சரிவை சந்தித்து உள்ளது. உலகம் முழுக்க பெரு நகரங்களில் வீடுகளின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. மக்கள் முக்கியமாக பெரு நகரங்களை விட்டு வேகமாக வெளியேறி வருகிறார்கள். வீட்டில் இருந்து வேலை என்பதால் பெருநகரங்களில் வீடுகளின் மதிப்பு வேகமாக சரிகிறது.

என்ன அமைப்பு

என்ன அமைப்பு

இந்த நிலையில் நைட் ஃபிராங்க் பிரைம் கோலப் சிட்டி (Knight Frank's Prime Global Cities) என்ற அமைப்பு உலகம் கொரோனா பாதிப்பை தொடர்ந்து வீடுகளின் மதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்று மதிப்பிட்டு உள்ளது. வீடுகளின் மதிப்பு உயர்ந்து இருக்கிறதா அல்லது குறைந்து இருக்கிறதா என்று கண்டுபிடித்து உள்ளது. மொத்தம் 45 பெரு நகரங்களை இந்த பட்டியலில் சோதனை செய்து உள்ளனர்.

பெங்களூர் நிலை

பெங்களூர் நிலை

இந்த நிலையில் உலக அளவில் வீடுகளின் மதிப்பு என்று அழைக்கப்படும் பிரைம் ரெசிடெண்ட்ஷியல் மார்க்கெட் மதிப்பில் (prime residential market) பெங்களூர் வேகமாக முன்னேறி உள்ளது. prime residential market மதிப்பு என்பது ஒரு நகரத்தில் இருக்கும் வீடுகளின் மதிப்பு என்ன, அதை எத்தனை பேர் வாங்க விரும்புகிறார்கள், எவ்வளவு பேர் அந்த நகரத்தில் வசிக்க விரும்புகிறார்கள், என்பதைப்பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்.

சரிவுக்கு இடையில்

சரிவுக்கு இடையில்

உலகம் முழுக்க பொருளாதாரம் சரிந்து கூட பெங்களூரில் இதன் மதிப்பு 0.6% உயர்ந்துள்ளது. அதாவது பெங்களூரில் வசிக்க மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் டெல்லியில் இதன் மதிப்பு 0.3% உயர்ந்துள்ளது. மும்பையில் 0.6% சரிந்து இருக்கிறது. உலக அளவில் மணிலா நகரம் 14.10% வளர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் 26, டெல்லி 27, மும்பை 32 ஆகிய இடங்களில் உள்ளது. சென்னை முதல் 45 இடங்களில் இடம் பிடிக்கவில்லை.

English summary
Karnataka Capital city Bangalore reaches 26th spot in the residential market globally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X