பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடே.. அசத்தல் ஏற்பாடு.. இனிமேல் இப்படித்தான் ஹோட்டலில் சாப்பிடனுமா?

Google Oneindia Tamil News

பெங்களூர்: உணவகங்களில் ஜூன் 8ம் தேதி முதல், உட்கார்ந்து சாப்பிடும் வசதியும் அமலாக உள்ளது. எனவே சமூக இடைவெளியை கடைபிடித்து கஸ்டமர்களை உபசரிக்க வேண்டிய நிலை ஹோட்டல்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Unlock 1 க்கு பின் பொருளாதாரம் பற்றி முதல்முறையாக மோடி முக்கிய பேச்சு

    இதற்கான ஏற்பாடுகளை ஹோட்டல் நிர்வாகங்கள் இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டன. அதில் பெங்களூரிலுள்ள ஒரு ரெஸ்டாரண்ட் ஒருபடி மேலே போயுள்ளது.

    மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.

    பெங்களூர், ஹைதராபாத், டெல்லியில் பஸ், ஆட்டோக்கள் இயக்கம் துவங்கியது.. பயணிகள்தான் இல்லை பெங்களூர், ஹைதராபாத், டெல்லியில் பஸ், ஆட்டோக்கள் இயக்கம் துவங்கியது.. பயணிகள்தான் இல்லை

    தமிழக அரசு உத்தரவு

    தமிழக அரசு உத்தரவு

    சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவகங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக்கூடாது.

    டீ கடைகள்

    டீ கடைகள்

    டீ கடைகள் , உணவு விடுதிகள் ஆகியவற்றில் 7.6.2020 வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பெங்களூர் உணவகம்

    பெங்களூர் உணவகம்

    இந்த நிலையில், பெங்களூரிலுள் ஒரு பிரபல உணவகமான, வித்யார்த்தி பவன் ஒரு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு கஸ்டமர்கள் இடையேயும் நல்ல இடைவெளி இருக்கும் வகையில், கண்ணாடி கொண்டு இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாப்பிடும்போது பக்கத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

    பரவும் படம்

    பரவும் படம்

    சென்னை உள்ளிட்ட தமிழக உணவகங்களிலும் இப்படியான, பாதுகாப்பு ஏற்பாடுகள் இனி வரும் காலங்களில் ஏற்படுத்தப்படலாம். பெங்களூர் ஹோட்டலில் இந்த புகைப்படம், பல்வேறு சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

    English summary
    Bangalore restaurant made special arrangements for in dining facility from June 8th, picture goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X