பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூர் கலவரம்.. நகரம் முழுக்க போலீஸ் குவிப்பு.. எடியூரப்பா அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து நகரம் முழுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

Recommended Video

    பெங்களூர் கலவரம்.. நள்ளிரவில் என்ன நடந்தது?

    மற்றொரு பக்கம், முதல்வர் எடியூரப்பா உள்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

    வடக்கு பெங்களூர் பகுதியில் அமைந்துள்ளது புலிகேசி நகர் சட்டசபை தொகுதி. இதன் எம்எல்ஏவாக இருப்பவர் அகண்ட சீனிவாச மூர்த்தி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்

    சாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்!சாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்!

    இதே வேலை

    இதே வேலை

    இவரது உறவினரான நவீன் என்பவர் ஃபேஸ்புக்கில் முஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், நூற்றுக்கணக்கானோர் இணைந்து எம்எல்ஏ வீட்டுக்கு எதிரே சென்று நேற்று இரவு போராட்டம் நடத்தியுள்ளனர். அவர் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடந்துள்ளது.

    துப்பாக்கிச் சூடு

    துப்பாக்கிச் சூடு

    தகவலறிந்து சென்ற போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் சொல்லி உள்ளனர். ஆனால் தொடர்ந்து வன்முறை நீடித்ததால் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் 3 பேர் பலியாகினர். இதனால் கடுமையாக கோபம் அடைந்த அவர்கள், டிஜே ஹள்ளி காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு கல் வீசி தாக்குதல் நடத்தியதில் கண்ணாடிகள் உடைந்தன. வாகனங்கள் தீக்கிரையாகின.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    எனவே, பிற பகுதிகளிலிருந்து போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். இதன் பிறகு அங்கிருந்து வன்முறை செய்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
    இதையடுத்து டேனரி ரோடு, டிஜே ஹள்ளி முதல் ஹெப்பால் வரை வடக்கு பெங்களூர் பகுதிகளில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் பாதுகாப்பு காரணத்துக்காக அடைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக உள்ளது. நகரின் பிற பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எடியூரப்பா ஆலோசனை

    எடியூரப்பா ஆலோசனை

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எடியூரப்பா நேற்று முன்தினம் தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார். வீட்டில் ஓய்வில் இருந்தார். ஆனால், தலைநகரில் நிலைமை கைமீறிப்போயுள்ளதால், இன்று அவர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வன்முறை சம்பவம் பிற பகுதிகளில் பரவாமல் இருப்பதற்கு அனைத்து மத வழிபாட்டுத் தலங்களை சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பேஸ்புக் பதிவு

    பேஸ்புக் பதிவு

    பெங்களூரில் மதம் தொடர்பான வன்முறை வெடிப்பது இது முதல் முறை கிடையாது. சிவாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள கன்னட நாளிதழ் ஒன்று சில வருடங்களுக்கு முன்பாக வெளியிட்ட ஒரு செய்தி காரணமாக அந்த அலுவலகத்தை சுற்றிலும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. நடிகர் ராஜ்குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தபோது, நகரம் முழுக்க வன்முறைக்காடாக மாறியது. நடிகர் விஷ்ணுவர்த்தன் உயிரிழந்தபோது, அவர் உடல் தகனம் நடைபெற்ற, நகரின் மேற்கு மண்டல பகுதிகளில் கலவரம் வெடித்தது. தற்போது முதல் முறையாக, ஒரு பேஸ்புக் பதிவுக்காக வன்முறை வெடித்துள்ளது.

    English summary
    Bangalore riot: Two people died in police firing, one injured shifted to a hospital. Restrictions under Section 144 of CrPC imposed in Bengaluru & curfew imposed in DJ Halli & KG Halli police station limits of the city, says Bengaluru Police Commissioner Kamal Pant. CM Yeddyurappa will hold a review meeting over this issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X