பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒன்னும் சரியில்லை.. பெங்களூரில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா.. தினமும் ஆயிரத்திற்கு மேல் கேஸ்கள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகரில் ஒரே நாளில் 1,148 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ள நிலையில், பெங்களூர் நகர மொத்த கேஸ்கள் எண்ணிக்கை 10,103 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளன. கொரோனா பாதிப்பை வெற்றிகரமாக கையாண்ட நகரம் என்று பெயர் பெற்ற பெங்களூர் இப்போது, சென்னை பாணியில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில், புதன்கிழமை 2,062 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகின. எனவே மொத்த கேஸ்கள் எண்ணிக்கை 28,877 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளளது.

பெங்களூரில் 54 பேர் பலியானதாக நேற்றைய புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இதுவரை பதிவான இறப்பு எண்ணிக்கையில் இதுதான் அதிகமாகும்.

 மயிலாப்பூர் பஜ்ஜிக் கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலியா? உண்மை என்ன? மயிலாப்பூர் பஜ்ஜிக் கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலியா? உண்மை என்ன?

சேகரிப்பு

சேகரிப்பு

அதேநேரம், இந்த இறப்புகள் அனைத்தும் ஒரே நாளில் நிகழவில்லை, கடந்த சில வாரங்களாக ஜூன் 17 அன்று நடந்த ஒரு மரணம் உட்பட விடுபட்டு சேகரிக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை இதுதான்.

மோசமான கட்டமைப்பு

மோசமான கட்டமைப்பு

நேற்றைய புள்ளி விவரத்தில் அதிர்ச்சியளிக்க கூடிய 3 தகவல் உள்ளது. அதில் 2 பேர் இறந்த பிறகு, மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஒரு நோயாளி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துள்ளார். இது மோசமான மருத்துவ கட்டமைப்பை அம்பலப்படுத்தும் வகையில் உள்ளது.

சிறுவனுக்கு பாதிப்பு

சிறுவனுக்கு பாதிப்பு

இறந்தவர்களில், 90 வயதான பெண், 14 வயது சிறுவன் ஒருவர். இருவரும் பெங்களூர்வாசிகள். இன்ஃப்ளூயன்சா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள். கோவிட் 19ம் சேர்ந்து கொண்டதால் அவர்கள் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து

போக்குவரத்து

தமிழகத்திலிருந்து வருவோரை பெங்களூருக்குள் விடாமல் தடுத்து வந்தது கர்நாடக அரசு. இதற்கு காரணம், தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதுதான். ஆனால், பஸ், ஆட்டோ இயக்கத்தை உள்ளூரில் ஆரம்பித்த பிறகு, கொரோனா பரவல் பெங்களூரிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
With 1,148 cases reported in Bengaluru city in a single day, the city has now 10,103 active cases out of 16,527 active cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X