பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரு மக்களுக்கு நல்ல செய்தி.. மாறும் எல்லைகள்.. உயரும் வார்டுகள்.. செம்ம மாற்றம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியை நிர்வகிக்க தனி சட்டம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம் பெங்களூரு நகரத்தின் அத்தியாவசிய பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளை தீர்க்க முடியும். ஆளுநர் வஜுபாய் வாலா சட்டத்திற்கு ஒப்புதலை வழங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன 'புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே' என்ற அந்த சட்டம் திங்கள் முதல் நடைமுறைக்கு வருகிறது.

தற்போதைய நிலையில் பெங்களூரு மாநகராட்சியில் தற்போது 198 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து கர்நாடக அரசு மாநகராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்தது. இந்த மசோதா கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.ரகு எம்.எல்.ஏ. தலைமையில் சட்டசபை கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த பரிந்துரை செய்தது. அதன் பின்னர் புதிய சட்டம், மூன்று நாள் குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்டமன்றத்தின் இரு அவைகளாலும் டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

மேயர்களின் பதவி காலம் உயர்வு

மேயர்களின் பதவி காலம் உயர்வு

இந்த சட்டம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருவதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இச்சட்டப்படி பெங்களூரு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை, 198இல் இருந்து 243 ஆக அதிகரிக்கப்படுகிறது. மாநகராட்சியின் வரம்புகள் 1 கி.மீ சுற்றளவிற்கு நீட்டிக்கப்படும். 15 மண்டலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேயர் மற்றும் துணை மேயருக்கு பதவி காலம் 30 மாதங்களாக உயர்த்தப்படுகிறது.

புதிய மண்டல குழுக்கள்

புதிய மண்டல குழுக்கள்

அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள புதிய தொகுதி ஆலோசனைக் குழுக்களுக்குத் தலைமை தாங்குவதால் பெங்களூரு நகரத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அதிக அதிகாரங்களைப் பெறுவார்கள். கவுன்சிலர்கள் தலைமையில் புதிய மண்டல குழுக்கள் அமைக்கப்படும். தலைமை ஆணையருக்கு புகாரளிக்கும் வகையில் மண்டல ஆணையர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும்.

வரவேற்பு

வரவேற்பு

கூட்டுத் தேர்வுக் குழுவின் உறுப்பினருமான உதய் கருடகஹர் கூறுகையில். "பெங்களூரு உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும், இதற்கு ஆளுகைக்கு ஒரு பிரத்யேக சட்டம் தேவை. நகரத்தை உலகின் மிகச்சிறந்த நகரமாக மாற்ற இது நீண்ட தூரம் செல்லும் என்று நம்புகிறோம், " என்றார்.

மக்கள் ஆலோசனை

மக்கள் ஆலோசனை

எனினும் இச்சட்டத்திற்கு சில குழுவினர் மற்றும் அரசியல்வாதிகள் புதிய சட்ட விதிகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். மக்களின் ஆலோசனையின்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர். புதிய சட்டம் பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை எடுக்காமல் வரைவு செய்யப்பட்டுள்ளது எனவே இதனால் பெங்களூரு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்காது" என்று எம்.எல்.சியும் தேர்வுக் குழுவின் உறுப்பினருமான பி.ஆர்.ரமேஷ் கூறினார்.

English summary
Bengaluru gets governance law: The number of wards will increase from 198 to 243 and the existing municipal limits will be extended by a 1-km radius. The mayor and deputy mayor will have 30-month tenures instead of one year terms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X