பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சித்தார்த்தா தற்கொலையில் மர்ம முடிச்சுகள்!.. சந்தேக கேள்விகளை எழுப்பும் போலீஸ் அதிகாரி!

Google Oneindia Tamil News

Recommended Video

    CCD Siddhartha : சித்தார்த்தா மரணம்..ஐடி ரெய்டின் மறுபக்கம்..அதிர்ச்சி தகவல்- வீடியோ

    பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேக கேள்விகளை போலீஸ் அதிகாரி ஒருவர் எழுப்பியுள்ளார்.

    காபி டே நிறுவனர் சித்தார்த்தா தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த திங்கள்கிழமை மாலை நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

    போலீஸ் அதிகாரி

    போலீஸ் அதிகாரி

    இந்த நிலையில் தக்ஷின கன்னட மாவட்டத்தின் மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சந்தீப் பாட்டீல் பெங்களூரு மாநகர போலீஸ் இணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மங்களூருவில் சந்திப் பாட்டீல் பேட்டி அளித்தார்.

    மர்ம முடிச்சுகள்

    மர்ம முடிச்சுகள்

    அவர் கூறுகையில் காபி டே அதிபரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா மங்களூர் அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளன.

    ஏராளமான கேள்விகள்

    ஏராளமான கேள்விகள்

    இதுவரை நடத்தப்பட்ட விசாரணையிலும் சேகரிப்பட்ட தகவல்களின் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது. இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவில்லை.

    சந்தீப் பாட்டீல் பேட்டி

    சந்தீப் பாட்டீல் பேட்டி

    குறிப்பாக சித்தார்த்தா அணிந்திருந்த சர்ட் அவருடைய உடலில் இல்லை. அவரது உடலில் சர்ட் இல்லாததால் அவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா என உறுதிப்பட நம்ப முடியவில்லை என்றார் சந்தீப் பாட்டீல்.

    English summary
    Bengaluru Joint Commissioner of Police says that there is mystery in Siddhartha suicide case. There are so many mysterious knots are in this case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X