பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனிமையில் வினுதா.. கொடூர கொலை.. ஒரு க்ளூவும் இல்லை.. சாய்ந்து கிடந்த கண்ணாடி.. சிக்கிய நரேந்திரா

மனைவி கொன்ற கணவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: தனிமையில் இருந்த வினுதா.. ரொம்ப நேரமாக செல்போனை எடுக்கவே இல்லை.. உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டிற்குள் வினுதா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.. ஒரு க்ளூவும் கிடைக்காத நிலையில், சிமெண்ட் தொட்டி, ஜன்னல் கண்ணாடி.. போன்றவற்றின் உதவியால் போலீசார் கொலையாளிகளை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த தம்பதி வினுதா - நரேந்திர பாபு. கல்யாணம் ஆகி 12 வருஷங்கள் ஆகின்றன.. 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.. ஆனால் தம்பதிக்குள் ஏதோ பிரச்சனை.. அதனால் டைவர்ஸ் கேட்டு காத்துள்ளனர்.. நரேந்திர பாபு மகனை அழைத்து கொண்டு தனியாக வந்துவிட்டார்.. வினுதா மட்டும் பெங்களூருவில் ஒரு வீடு எடுத்து தங்கி வந்திருக்கிறார்.

போன 20-ம் தேதி வினுதாவுக்கு அவரது அம்மா செல்போனில் கூப்பிட்டுள்ளார்.. ஆனால் போன் எடுக்கவில்லை.. அதனால் நேரடியாக வீட்டுக்கே சென்று பார்த்தார்.. ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது.. இதனால் பயந்துபோய் போலீசுக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்து அவர்கள் கதவை உடைத்து பார்த்தனர்.

நடுவீட்டில் 4 மாதமாக கிடந்த எலும்புக்கூடு... கரிக்கட்டை சடலம்.. நடந்தது என்ன.. பரபர பின்னணி!நடுவீட்டில் 4 மாதமாக கிடந்த எலும்புக்கூடு... கரிக்கட்டை சடலம்.. நடந்தது என்ன.. பரபர பின்னணி!

சடலம்

சடலம்

அப்போது வினுதா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.. சிமெண்ட் தொட்டிக்கு பக்கத்திலேயே வினுதா விழுந்து கிடக்கவும், ஒருவேளை தவறி விழுந்து தொட்டியில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

ஜன்னல் கண்ணாடி

ஜன்னல் கண்ணாடி

இருந்தாலும் வினுதா எப்படி இறந்தார் என்று தெரியவே இல்லை.. போலீசாருக்கு ஒரு க்ளூவும் சிக்கவில்லை.. அப்போது வீடு முழுவதும் சோதனையிட்டனர்.. அந்த சமயத்தில்தான் பாத்ரூம் ஜன்னல் கண்ணாடி சாய்ந்து கிடந்தது.. யாரோ அதை கழட்டி மாற்றியதுபோல தெரிந்தது.. கொலையாளி கண்ணாடியை கழட்டி, அதன் வழியே வெளியே தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் யூகித்தனர்.

 விவாகரத்து

விவாகரத்து

இந்த சமயத்தில்தான் வினுதாவின் விவாகரத்து விஷயம் போலீசாருக்கு தெரியவந்தது.. அதனால் தங்கள் விசாரணையை அப்படியே நரேந்திரா பக்கம் திருப்பினர்.. தங்கள் பாணி விசாரணையை காட்டியதுமே விஷயத்தை ஒப்புக் கொண்டார் கணவன் நரேந்திரா. வினுதா தங்கியிருந்த வீட்டை விற்க நரேந்திரா முயற்சி செய்திருக்கிறார்.. வினுதா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என தெரிகிறது.

சிமெண்ட் தொட்டி

சிமெண்ட் தொட்டி

இதனால், மனைவியைக் கொல்ல ரூ 5 லட்சம் கொடுத்து 2 பேரை ஏற்பாடு செய்துள்ளார்.. சம்பவத்தன்று பாத்ரூம் ஜன்னல் வழியாக வந்த 2 கூலியாட்களும், சோபாவில் உட்கார்ந்திருந்த வினுதாவை கட்டையால் தலையில் அடித்து கொன்றுள்ளனர்.. உடலை சிமெண்ட் தொட்டி பக்கம் இழுத்து சென்று திசை திருப்பி உள்ளனர்.. இவர்கள் 2 பேருமே அதே வீட்டின் இன்னொரு பகுதியில் வசிப்பவர்களாம்.. அதனால்தான் வீட்டின் அமைப்பு இவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது என்கிறார்கள் போலீசார். இப்போது கைதாகி உள்ள 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

English summary
husband hired 2 to kill estranged wife due to family issue and 3 arrested in bengaluru
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X