பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமாரசாமி மகன் நிகில் பற்றி சர்ச்சை செய்தி.. நாளிதழ் எடிட்டர் மீது பாய்ந்தது வழக்கு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் கவுடா பற்றி சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்டதற்காக கன்னட நாளிதழ் ஒன்றின் எடிட்டர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நடைபெற்ற லோக்சபா தேர்தலில், சுயேச்சை வேட்பாளர் சுமலதாவிடம், மண்டியா தொகுதியில் நிகில் கவுடா தோல்வியடைந்தார். இதன்பிறகு, மைசூரிலுள்ள ஹோட்டலுக்கு நிகில் கவுடா சென்றதாகவும், பிறகு அங்கு சில விரும்பத் தகாத செயல்கள் நடந்ததாகவும் விஸ்வவாணி என்ற கன்னட நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

Bengaluru police filed an FIR against Kannada daily editor Vishweshwar Bhat

மோடி அலையால் ஆட்டம் காணும் காங்கிரஸ்.. இன்று, மேலும் 3 மாநில தலைவர்கள் ராஜினாமா! மோடி அலையால் ஆட்டம் காணும் காங்கிரஸ்.. இன்று, மேலும் 3 மாநில தலைவர்கள் ராஜினாமா!

இந்த செய்திக்கு, ட்விட்டரில் குமாரசாமி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விஸ்வவாணி பத்திரிக்கை எடிட்டர் விஸ்வேஸ்வர் பட் மீது ம.ஜ.த சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூர், ஸ்ரீராமபுரம் பகுதி போலீஸ் நிலையத்தில் ம.ஜ.த செயலாளர் பிரதீப் குமார் என்பவர், விஸ்வேஸ்வர் பட்டுக்கு எதிராக அளித்த புகாரின் பேரில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இதனிடையே கர்நாடகாவில் எமெர்ஜென்சி நிலை போன்ற சூழல் நிலவுவதாக, பாஜக சார்பில் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. #EmergencyInKarnataka என்ற பெயரில், ட்விட்டரில் குமாரசாமி அரசை விமர்சித்து பாஜக சார்பில் டிரெண்ட் செய்யப்பட்டது.

English summary
Bengaluru police have filed an FIR against Vishweshwar Bhat, editor of Kannada daily, Vishwavani, for publishing alleged derogatory remarks against K. Nikhil, son of Chief Minister H.D. Kumaraswamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X