பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் ஏன் அந்த நேரத்துல ஓட்டலை தெரியுமா.. இந்த பஸ் டிரைவர் செய்த கூத்தைப் பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகு காலத்தில் பேருந்தை இயக்காத டிரைவர்

    பெங்களூர்: தாமதமாக பேருந்தை இயக்கியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய கிளை மேலாளர், டிரைவர் அளித்த பதிலை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் ஆகியன புதிதாக தொடங்கும் ஒரு காரியங்களுக்கு பார்ப்பதை நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அன்றாடம் நாம் செய்யும் பணிகளுக்கு பொருந்தாது.

    அதுவும் பொதுமக்கள் சார்ந்த பணிகளுக்கு இது ஒத்து வரவே வராது. பொதுமக்களுக்கு அலைக்கழிப்பை உண்டாக்கும். இப்படித்தான் ஒருவர் எதற்கு நல்ல நேரம் பார்ப்பது என்றே தெரியாமல் மூடநம்பிக்கையை பின்பற்றியுள்ளார்.

    [ஜோடிகளே ஜோடிகளே இந்த ஹோட்டலுக்கு மட்டும் தயவு செய்து போய் விடாதீங்க! 310 அறையை புக் செய்யாதீங்க!]

    வழித்தடம்

    வழித்தடம்

    பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் யோகேஷ். இவர் மெஜஸ்டிக்கில் இருந்து சி.கே. அச்சுக்கட்டு வழித்தடத்தில் பேருந்தை இயக்கி வருகிறார்.

    தாமதமாக இயக்கி

    தாமதமாக இயக்கி

    இவர் தினமும் காலை 6.15 மணிக்கு பேருந்தை ஓட்ட தொடங்க வேண்டும். ஆனால் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு பேருந்தை யோகேஷ் எடுக்கவில்லை. மாறாக அவர் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக காலை 7.35 மணிக்கு பேருந்து எடுத்தார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதுகுறித்து தகவல் அறிந்த கிளை மேலாளர் விளக்கம் அளிக்கும்படி டிரைவர் யோகேஷுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸை பெற்ற யோகேஷ், பஸ்ஸை தாமதமாக ஓட்டியது தொடர்பாக விளக்கம் அளித்தார். யோகேஷ் அளித்த விளக்கத்தை படித்துவிட்டு மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    தாமதமாக பேருந்து

    தாமதமாக பேருந்து

    கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஜோதிடர் ஒருவரை சந்தித்தேன். அப்போது அவர் ராகு காலத்தில் பஸ் ஓட்ட தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மீறி பஸ் ஓட்டினால் 15 பேர் உயிரிழக்க நேரிடும் என்று கூறினார். இதனால் ராகு காலத்தில் பஸ் இயக்குவதை தவிர்த்தேன். பயணிகளை காப்பாற்ற வேண்டி தாமதமாக காலை 7.35 மணிக்கு பேருந்தை ஓட்ட தொடங்கினேன்.

    நோக்கம் இல்லை

    நோக்கம் இல்லை

    போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. டெப்போ மற்றும் போக்குவரத்து கழக அலுவலகங்களில் கனகஜெயந்தி, பசவஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி தினங்களில் பூஜை மற்றும் ஹோமம் நடத்துவது எவ்வளவு நம்பிக்கையானதோ, அதே நம்பிக்கை ஜோதிடர் கூறும் வார்த்தைகளிலும் உள்ளது. இதனால் இந்த பிரச்சினையை இப்படியே முடித்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் விளக்கமளித்து உள்ளார்.

    English summary
    A Bangalore bus left one and a half hours later than its scheduled departure timing. On being asked the reason of delay by the head office, the driver said that he delayed the trip on the basis of the advice by an astrologer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X