பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேட்டிங்க் ஆப்பில் ஆப்பு.. லாகின் செய்ததால் லட்சங்களை இழந்த பெங்களூரு ஐடி ஊழியர்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியரை டேட்டிங் தளத்தில் 4லட்சம் ரூபாயை ஏமாந்துள்ளார். டேட்டிங் தளத்தில் லாகின் செய்தவரை ஏமாற்றி உள்ளார்கள் இரண்டு பெண்கள். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக ஐடி பணியாளர் பெங்களூரு போலீசில் அளித்த புகாரில் ஒரு "டேட்டிங் நட்பு மற்றும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனம்" 2019 டிசம்பரில் என்னுடைய நிறுவனத்தை ரிஜிஸ்டர் செய்து தருவாக போலியான காரணத்தை கூறி என்னை அணுகியது. அதில் இணைய நான் ஒப்புக் கொண்டேன் பின்னர் சேர்க்கைக் கட்டணமாக ரூபாய் 2,000 செலுத்துமாறு கேட்டுள்ளார்கள். அதன்படி நான் செலுத்தினேன்.

Bengaluru techie cheated by dating portal, he loses ₹4 lakh in online scam

பின்னர், இரண்டு பெண்கள் டிசம்பர் 20 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அதிக பணம் கேட்டு வந்தார்கள், மொத்தம் 4.19 லட்சம் கொடுத்தேன். இருப்பினும், அவர்கள் மூன்றாவது முறையாக என்னை அணுகி பணம் கேட்டார்கள். இதனால் சந்தேகப்பட்டேன் அவர்கள் கூடுதலாக ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்று கோரினார்கள் என்றும் அவர்களிடம் இருந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து பெங்களூரு போலீசார் டேட்டிங் இணையதளம் மற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் மீதும் ஜனவரி 24 ஆம் தேதி வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

English summary
Bengaluru techie cheated of Rs 4.19 lakh by a dating portal under the pretext of registering their firm with his company
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X