பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கத்தியால் குத்தி.. தாயை கொன்றுவிட்டு.. சூட்டோடு சூட்டாக காதலனுடன் அந்தமானுக்கு ஜாலி டூர் போன மகள்!

பெற்ற தாயை கொன்ற மகளை போலீசார் கைது செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெற்ற அம்மாவை கத்தியால் குத்தி கொன்றாச்சு.. அடுத்து சொந்த தம்பியையும் அடிச்சு தாக்கியாச்சு.. உடனே அந்தமானுக்கு காதலனுடன் டூர் போய்விட்டார் இளம்பெண்!
பெங்களூர் கேஆர் புரம் அருகே வசித்து வருபவர் அம்ருதா சந்திரசேகர்.. இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்.. 33 வயதாகிறது.. ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

அப்பா இறந்துவிட்டார்.. அதனால் அம்மா நிர்மலா, தம்பி ஹரிஷ் ஆகியோருன் வசித்து வந்துள்ளார்.. ஹரிஷ் கூட ஒரு ஐடி ஊழியர்தான்.. ஹைதராபாத்துக்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது.. அதனால் அங்கு செல்ல தயாராகி வந்துள்ளார்.

 மல்லிகாவுக்கு சிக்னல் கிடைக்கவில்லை.. விரைந்து வந்தான் மல்லிகாவுக்கு சிக்னல் கிடைக்கவில்லை.. விரைந்து வந்தான் "காவலன்".. மக்கள் அப்ளாஸை அள்ளும் SOS ஆப்!

கூச்சல்

கூச்சல்

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடிகாலை அம்ருதா ரூமில் யாரோ காட்டுத்தனமாக கூச்சல் போடுவது தெரிந்தது.. இதனால் தூங்கி கொண்டிருந்த ஹரீஷ், பதறியடித்து கொண்டு அக்கா ரூமுக்குள் சென்றிருக்கிறார்.. ஆனால் அங்கு யாருமே இல்லை.. அம்ருதா ஷெல்ப்-ல் இருந்து துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்தார். எதுவுமே புரியாமல் நின்ற ஹரீஷ், நான் உதவி செய்யட்டுமா என்று கேட்டுள்ளார்.

இரும்பு கம்பி

இரும்பு கம்பி

எதுவும் வேண்டாம் என்று அம்ருதா சொல்லவும், திரும்பவும் தன் ரூமுக்கு வந்து ஹரிஷ் படுத்து கொண்டார்.. கொஞ்ச நேரம் கழித்து தம்பியின் ரூமுககு வந்த அம்ருதா, அவரை கழுத்தில் கத்தியால் குத்தினார்.. பிறகு கம்பியால் தாக்கினார்.. இதில் அங்கேயே சரிந்துவிழுந்தார் ஹரீஷ்.. அவர் இறந்துவிட்டதாக நினைத்த அம்ருதா, அதே கத்தியை எடுத்து கொண்டு தன் அம்மாவை குத்தி கொலை செய்தார்.

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

அதன்பிறகு அம்ருதா அங்கிருந்து ஓடிவிட்டார். படுகாயங்களுடன் கண்விழித்து பார்த்த ஹரீஷ், உறவினர்கள் உதவியுடன் போலீசில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போது அம்ருதா வீட்டிலிருந்து வெளியே சென்று, கொஞ்ச தூரத்தில் பைக்கில் வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ஆண் நண்பர் ஸ்ரீதர் ராவுடன் ஏறி உட்கார்ந்தார்.

அந்தமான்

அந்தமான்

அந்த பைக் கெம்பேகௌவுடா ஏர்போர்ட்டுக்கு சென்றது.. அப்போதே காலை 6.30 மணிக்கே அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஃப்ளைட்டில் ஏறி சென்றார்.. மொத்தம் 5 நாள் லீவு எடுத்து கொண்டு அந்தமான் டூருக்கு காதலனுடன் கிளம்பி சென்றார் அம்ருதா. இதையடுத்து போலீசார் அந்தமானுக்கு சென்று, அங்கு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்த அம்ருதாவையும், ஆண் நண்பரையும் கைது செய்தனர்... அவர்கள் பெங்களூரு கொண்டு வரப்பட்ட பிறகுதான் எதற்காக இந்த கொலை என்ற விவரம் எல்லாம் தெரியவரும்.

குழப்பங்கள்

குழப்பங்கள்

அம்ருதாவிடம் ஓரளவு நடத்திய விசாரணையில் சில தகவல்களை சொல்லி உள்ளார்.. ஆனால் அம்ருதா சொல்வதற்கும், தம்பி சொன்ன காரணங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாம்.. இந்த சம்பவத்தில் பல குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.. புற்றுநோயால் இறந்துவிட்ட தந்தைக்கு நிறைய கடன் வாங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளானாராம் அம்ருதா.. அதனால்தான் அம்மாவையும் தம்பியையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தாராம்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதற்கு முன்பு ஒருமுறை ஆண் நண்பருடன் ஜாலியாக டூர் போகலாம் என்று நினைத்து அந்தமான் வந்தாராம்.. ஆனால் அம்ருதா இப்படி சொல்வதை இதை போலீசார் நம்ப மறுக்கிறார்கள்.. ஏன் என்றால், அந்தமான் போவதற்கு ஜனவரி 31-ம் தேதியே அம்ருதா டிக்கெட் புக் செய்துள்ளார்.. அதனால் இந்த கொலை வழக்கில் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது.. முழு விசாரணை நடந்தால்தான் எல்லாம் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்!

English summary
bengaluru techie killed her mother and flies with boyfriend to tour and arrested now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X