பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா... ஷாக் கொடுக்க காத்திருக்கும் மாதங்கள்!!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூருவில் தினமும் 3,500க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால், வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மேலும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

டெல்லியை அடுத்து அதிகமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் நகரங்களில் இரண்டாவது இடத்தில் பெங்களூரு இருக்கிறது. பெங்களூருவில் தற்போது கொரோனா தொற்று விகிதம் 14%மாக உள்ளது. டெல்லியில் 6.8% ஆக இருக்கிறது. டெல்லியுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரி விகிதம் 9%ஆக இருக்கிறது.

2021 ஜனவரி 27-ல் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை- ஆர்.டி.ஐ. மூலம் தகவல்! 2021 ஜனவரி 27-ல் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை- ஆர்.டி.ஐ. மூலம் தகவல்!

தொற்று அதிகரிக்கும்

தொற்று அதிகரிக்கும்

இதுகுறித்து தொற்று நோய் மருத்துவர்கள் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ''அடுத்த இரண்டு மாதங்களுக்கு பெங்களூருவில் கொரோனா தொற்று அதிகரிக்கும். பெரிய அளவில் தொற்று பரவி வருவதால் பெங்களூருவுக்கு இது சவாலாக அமையும்'' என்று தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு

பெங்களூரு

கடந்த பத்து நாட்களில் மட்டும் பெங்களூருவில் 21000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 10 லட்சம் பேரில் 25,722 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறப்பு

இறப்பு

தொற்று நோய் மருத்துவர் டாக்டர் கிரிதர ஆர் பாபு அளித்திருக்கும் பேட்டியில், ''நகரின் பல்வேறு மண்டலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. வெவ்வேறு கட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெங்களூருவில் தொற்று அதிகரிக்கும். இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக கொண்டு வருவதுதான் தற்போது கவலையாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

முந்தியது

முந்தியது

மாநிலங்களின் மற்ற தலைநகரங்களில் மே மாதத்தின் மத்தியில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி இருந்தது. ஆனால், பெங்களூருவில் ஜூலை மத்தியில்தான் அதிகரித்தது. சென்னை மற்றும் மும்பையை முந்திச் சென்றுள்ளது. ஜூன் 30ஆம் தேதி மட்டும் 4,904 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. செப்டம்பர் 21ஆம் தேதி வரை 1.97 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தளர்வுகள்

தளர்வுகள்

மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் விரைவில் நாங்கள் தளர்வுகளை அறிவித்து இருந்தோம். மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பலரும் மாஸ்க் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. பெரிய அளவில் மக்கள் சந்திப்பும் நடந்து வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை.

பாசிடிவ்

பாசிடிவ்

நகரில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.மக்கள் முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்'' என்று கர்நாடகா சுகாதாரத்துறை கமிஷனர் பங்கஜ் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

English summary
Bengaluru will get more coronavirus cases in coming months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X