பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு திரும்பும் இந்தியர்களுக்காக.. பெங்களூரு விமான நிலையத்தில் வரப்போகுது பயோமெட்ரிக் வசதி

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையம் வழியாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் இந்தியர்கள் விரைவில் தங்கள் பாஸ்போர்ட்களை முத்திரை குத்த குடியுரிமை அலுவலக வரிசையில் காத்திருக்க தேவையில்லை. ஏனெனில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

பெங்களூரு சர்வதேச விமான நிலைய பிரைவேட் லிமிடெட் (BIAL) வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் இந்தியர்களுக்காக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முன்மொழிந்துள்ளது, அந்த விமான நிலையம் வழியாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நாட்டிற்கு திரும்பி வந்தால், அவர்களின் வருகையை பதிவு செய்ய ஐரிஸ் ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த முன்மொழிவினை பெங்களூருசர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி கே மரார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு பணியகத்திற்கு இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

மற்ற பகுதிக்கும்

மற்ற பகுதிக்கும்

எங்களின் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்படும். அதன் பிறகு மற்ற விமான நிலையங்களுக்கும் இந்த பயோமெட்ரிக் ஸ்கேன் முறை நீட்டிக்கப்பட்டால், நாடு திரும்பும் இந்திய குடிமக்கள் குடியுரிமை அதிகாரிகளின் பாஸ்பார்ட்டில் முத்திரை பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டி அவசியம் இருக்காது.

கருவிழி தொழில்நுட்பம்

கருவிழி தொழில்நுட்பம்

பெங்களூரு விமான நிலையத்தில் எங்கள் செலவில் இந்த வசதிகளை மேற்கொள்ள உள்ளதாக குடிவரவு பணியகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். நாட்டிற்கு திரும்பும் இந்தியர்களுக்காக (பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்) பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்குவோம். கட்டைவிரல் அல்லது கருவிழி போன்ற எந்த பயோமெட்ரிக்கையும் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்துவோம்.

டிஜிட்டல் ஸ்டாம்ப்

டிஜிட்டல் ஸ்டாம்ப்

இந்த திட்டத்தின் கீழ் ஒரு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் நாட்டிற்கு திரும்பும்போது பாஸ்போர்ட் டிஜிட்டல் முத்திரை பதிக்கப்படும். அவர்கள் வேறு எந்த இந்திய விமான நிலையத்திலிருந்தும் நாட்டை விட்டு வெளியேறும்போது, டிஜிட்டல் ஸ்டாம்ப் முத்திரையாக காண்பிக்கும், என்று மாரர் கூறினார்.

வரும் போது மட்டும்

வரும் போது மட்டும்

இதே தொழில்நுட்பத்தை இந்தியர்கள் நாட்டிற்கு வெளியே பறக்கும் போதும் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதைக்கு, பெங்களூரு விமானநிலையத்தின் திட்டம் இந்தியர்கள் மீண்டும் நாட்டிற்கு பறந்து வரும்போது மட்டும பயன்படுத்தும் நோக்கில் உருவாக்குவோம்," என்றும்அவர் கூறினார்.

English summary
Indian citizens flying back to the country at Bengaluru airport may soon not need to wait in immigration queues to get their passports stamped. because biometrics will use in Bengaluru International Airport
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X