பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கள் மண்டியா மாவட்டத்தின் மகள்!.. நடிகை குத்து ரம்யாவுக்கு பாஜக "திடீர்" அழைப்பு

Google Oneindia Tamil News

பெங்களூரு: 2 தேர்தல்களில் வாக்களிக்காத நடிகை ரம்யா இன்றாவது மண்டியா தொகுதிக்கு வந்து வாக்களிக்குமாறு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

கன்னட திரையுலகில் நடித்து வந்தவர் ரம்யா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளார்.

மோடிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைத்து வருகிறார். இவர் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்பியானார். இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட ரம்யா தோல்வி அடைந்தார்.

[கூட்டணிக்குப் பெரிய கட்சிகளுக்கு வாய்ப்பில்லை.. தனித்து விடப்படும் அபாயத்தில் தமிழக பாஜக! ]

தலைவி ரம்யா

தலைவி ரம்யா

இந்நிலையில் நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரீஸுக்கும் நடிகை குத்து ரம்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ரம்யா மாவட்ட அரசியலில் ஒதுங்கியே உள்ளார். இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவு தலைவராக ரம்யா நியமிக்கப்பட்டார்.

பறவையின் கழிவா

பறவையின் கழிவா

அவர் கடந்த 31-ஆம் தேதி உலகின் உயரமான படேல் சிலை திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டு மாபெரும் சிலையின் கீழ் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். இந்நிலையில் வெள்ளை நிற உடையுடன் மிகவும் சிறிதாக காட்சிளித்த மோடி, இது என்ன பறவையின் கழிவா என கேட்டு சர்ச்சைக்குள் சிக்கினார்.

பாஜக குற்றச்சாட்டு

பாஜக குற்றச்சாட்டு

இந்நிலையில் நடிகை ரம்யா 2014-ம் ஆண்டுக்கு பிறகு மண்டியா சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் இதுவரை அவர் வாக்குப்பதிவு செய்யவில்லை. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமூகவலைத்தளங்களில் வாக்களிப்பது நமது கடமை என தேர்தலின் போது மட்டும் கருத்து கூறுகிறார். ஆனால் அவர் வாக்களிக்க வருவதில்லை என்று பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இந்த நிலையில் மண்டியா மாவட்ட பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகியான சிவக்குமார் ஆராத்தியா என்பவர், நடிகை ரம்யா மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸுக்கு வாக்களித்தீர்

காங்கிரஸுக்கு வாக்களித்தீர்

இதுகுறித்து அவர் கூறுகையில், அக்கா... வணக்கம்... ஞாபகம் இருக்கா அக்கா. மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. நீங்கள் மண்டியா மாவட்டத்தின் மகள். அக்கா இந்த தேர்தலில் ஓட்டுப்போட நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம்.

ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்

ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்

எங்கள் கட்சி (பா.ஜனதா) வேட்பாளருக்கு ஓட்டுப்போட கண்டிப்பாக மண்டியாவுக்கு வாருங்கள். நீங்கள் பெங்களூருவில் இருந்தாலும், வேறு மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தாலும் வந்து ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள் என கூறினார்.

English summary
BJP activist calls Actress Ramya to vote for Mandhya as he is daughter of that constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X