பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளம் பாதித்த பகுதிக்கு போகாதீங்க.. பிரியாணி சாப்பிட போங்க.. எந்த டாக்டர் இப்படி சொன்னாங்க?.. பாஜக

Google Oneindia Tamil News

பெங்களூர்: வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சொந்த தொகுதியான பாதாமிக்கு பயணம் செய்வதை தடுத்த மருத்துவர்கள் பக்ரீத் பண்டிகைக்கு பிரியாணி மட்டும் சாப்பிட சொன்னார்களா என பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

தென்மேற்கு பருவமழையால் கர்நாடகம், கேரளம், தமிழகத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகம், கேரளத்தில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் பலியாகிவிட்டனர்.

இன்னும் சிலரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவரவர் தொகுதிகளை அந்தந்த மக்கள் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாதாமி சட்டசபை தொகுதிக்கு அதன் எம்எல்ஏ சித்தராமையா வரவில்லை என்பது குறித்து பெரிதாக விமர்சனம் செய்யப்பட்டது.

செம மூவ்.. அதிரடி ஆக்ஷன்.. திமுகவுக்கு செக் வைக்க சசிகலா தயாராகிறாரா? செம மூவ்.. அதிரடி ஆக்ஷன்.. திமுகவுக்கு செக் வைக்க சசிகலா தயாராகிறாரா?

கண்புரை அறுவை சிகிச்சை

இந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எனக்கு அண்மையில் கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனவே பயணம் செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எனது தொகுதியை என்னால் ஆய்வு செய்ய முடியவில்லை.

டுவிட்டரில் பதிவு

டுவிட்டரில் பதிவு

அதற்கு பதிலாக எனது மகன் யதிந்திரா, பாதாமி தொகுதியை ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என கடந்த 9-ஆம் தேதி டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டது.

விமர்சனம்

இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினரின் வீட்டில் நடந்த பிரியாணி திருவிழாவில் சித்தராமையா கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு கலந்து கொண்டார். இதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

குறை கேட்கும் நேரம்

குறை கேட்கும் நேரம்

இதுகுறித்து கர்நாடக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், டுவிட்டர் போதகர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் வீட்டுக்குச் சென்று பிரியாணி சாப்பிட மட்டும் நேரம் இருக்கிறது. ஆனால் பாதாமி தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்க மட்டும் நேரம் இல்லை போலும்.

டுவிட்டரில் பதிவு

டுவிட்டரில் பதிவு

சரி பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடனாவது தொகுதிக்கு செல்ல முயற்சி மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளை கேட்டறிங்கள் என பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த சமயம் முதல், முதல்வர் எடியூரப்பாவால் இந்த நிலையை சமாளிக்க முடியவில்லை என சித்தராமையா தொடர்ந்து விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP criticises Siddaramaiah for not visiting flood affeced Badami rather eats Briyani at Congress MLC's house for Eid feasting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X