பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 லட்சியம்.. ஆனால், 6 ஓகேதான்.. எப்படி ஒரு சிக்கல் பாருங்க எடியூரப்பாவுக்கு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka : கர்நாடக அரசியலில் தொடங்கியது மோதல்..எடியூரப்பாவை கண்டுகொள்ளாத மோடி- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்கள் ஆளும் பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆட்சியின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த தேர்தல்.

    கர்நாடகாவில் 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசு கலைந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது.

    கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட கட்சிகள் அளித்திருந்த புகாரின் அடிப்படையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

    ரூ.40 கோடி தேவை.. அதனால்தான் மாணவர்களின் கட்டணத்தை உயர்த்தினோம்.. ஜேஎன்யூ பல்கலை. அறிவிப்பு! ரூ.40 கோடி தேவை.. அதனால்தான் மாணவர்களின் கட்டணத்தை உயர்த்தினோம்.. ஜேஎன்யூ பல்கலை. அறிவிப்பு!

    17 எம்எல்ஏக்கள்

    17 எம்எல்ஏக்கள்

    இதனிடையே, கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட கட்சிகள் அளித்திருந்த புகாரின் அடிப்படையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டாா். சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 17 பேரையும் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரவிட்டது. ஆனால், இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கு சபாநாயகரால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருந்தது.

    2 தொகுதிகள்

    2 தொகுதிகள்

    கடந்த ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தோ்தலின்போது மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் சம்பந்தப்பட்ட வேட்பாளா்களின் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த இரு தொகுதிகள் நீங்கலாக 15 தொகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.

    சட்டசபை பலம்

    சட்டசபை பலம்

    இந்த தேர்தல் முடிவு எதற்காக முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்வி எழலாம். காரணம் இதுதான்: கர்நாடக சட்டசபையில் ஆளும் பாஜகவுக்கு 105, காங்கிரஸுக்கு 66, மஜதவுக்கு 34, பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சைக்கு தலா 1 இடங்கள் உள்ளன. 224 போ் கொண்ட கா்நாடக சட்டசபையில், அறுதிப்பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை. 15 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தோ்தல் நடப்பதால், 2 தொகுதிகள் காலியாக இருக்கும். 222 போ் கொண்ட கா்நாடக சட்டசபையில் பெரும்பான்மை பலம் பெற 112 தொகுதிகள் தேவைப்படுகின்றன.

    6 அல்லது 7

    6 அல்லது 7

    பாஜகவுக்கு ஏற்கெனவே 105 இடங்கள் இருப்பதால், சட்டசபையில் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி நிலைத்திருக்க வேண்டுமானால் அக்கட்சிக்கு கூடுதலாக 7 இடங்கள் தேவைப்படுகின்றன. அப்படி வெல்லாவிட்டால் ஆட்சி கலையும் வாய்ப்பு உள்ளது. இதில் சுயேச்சை உறுப்பினர் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். எனவே 6 இடங்களில் வென்றாலும் ஆட்சியை தக்க வைக்க முடியும். ஆனால் சுயேச்சையை நம்பிக் கொண்டு இருப்பதை விட சொந்த கட்சி பலத்தை நம்புவதே பாஜகவுக்கு நல்லது என்று நினைக்கிறார் எடியூரப்பா.

    அக்னி பரிட்சை

    அக்னி பரிட்சை

    பாஜக ஆட்சி அமைந்தபிறகு நடக்கும் முதல் தோ்தல் என்பதால், முதல்வா் எடியூரப்பாவின் செயல்பாடு மீதான மதிப்பீடாகவும் தோ்தல் முடிவுகள் அமைய வாய்ப்புள்ளது. ஒருபக்கம் எடியூரப்பாவுக்கு மட்டும் இந்த தேர்தல் அக்னி பரிட்சை இல்லை. எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசைக் கவிழ்க்க இடைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்கவேண்டிய அவசியம் காங்கிரஸுக்கும், மஜதவுக்கும் உள்ளதால், அவர்களும் இந்த தேர்தலை தீவிரமாக எதிர்கொண்டு பல்வேறு வியூகங்களை அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    English summary
    Ruling BS Yeddyurappa lead BJP government in Karnataka need to win atleast 6 or 7 seats in the up coming by elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X