பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமா.. எடியூரப்பா ஆட்சியமைக்க முடியாதே.. எப்படி ஆளுநரை சந்தித்தார்.. பாயிண்ட் பிடித்த காங்கிரஸ்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெரும்பான்மை பலம் இல்லாமல் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பது சாத்தியமே கிடையாது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில், அதில் இருவரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார், நேற்று இரவு திடீர் உத்தரவு பிறப்பித்தார்.

BJP is not in a position to make a claim: Congress

இதையடுத்து மற்ற 13 பேரும் அச்சமடைந்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய தங்களது சொந்த கட்சிகளுக்கு திரும்பி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், திடீரென, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா.

இதையடுத்து உடனடியாக, கர்நாடகா காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது, அதில் இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு சுயேச்சை என மொத்தம் மூன்று பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.

எனவே, சட்டசபையின் பலம் 221 என்ற நிலைக்கு வந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 111 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சுயேச்சை ஆகியோரது பலம் மட்டுமே உள்ளது. அப்படி இருக்கும்போது பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைப்பது சாத்தியமே கிடையாது. பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜகவின் செயல் என்பது, அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

English summary
Today, the BJP is not in a position to make a claim or swear an oath for says Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X