பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகா, தெலுங்கானா இடைத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவின் ஆர்.ஆர்.நகர் மற்றும் சிரா தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

கர்நாடகாவின் பெங்களூர் நகருக்குள் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் (ஆர்.ஆர்.நகர்), தும்கூர் மாவட்டத்தின் சிரா தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் போட்டியிட்டதால் மும்முனைப் போட்டி நிலவியது.

BJP leads in Karnataka, Telengana By Polls

இதில் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முனிரத்னா 57,672 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் குஷ்மாவை தோற்கடித்தார். ஜேடிஎஸ் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி 3வது இடத்தை பிடித்தார்.

சிரா தொகுதியில் முதல் முறையாக பாஜக வென்றுள்ளது. பாஜக வேட்பாளர் ராஜேஷ் கவுடா 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயசந்திராவை தோற்கடித்தார். ஜேடிஎஸ்-ன் அம்மஜம்மா 3வது இடம் பிடித்தார். காங்கிரஸ் தலைவராக டிகே சிவகுமார் பொறுப்பேற்ற பிறகு நடந்த இந்த தேர்தல்களில் பாஜக அமோகமாக வென்றுள்ளது.

இடைத் தேர்தல்.. சட்டசபை தேர்தல்.. எல்லா இடமும் பாஜக அமோகம்.. எப்படி சாத்தியம்? சிம்பிள் லாஜிக்தான் இடைத் தேர்தல்.. சட்டசபை தேர்தல்.. எல்லா இடமும் பாஜக அமோகம்.. எப்படி சாத்தியம்? சிம்பிள் லாஜிக்தான்

தெலுங்கானாவின் துபக்கா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் 1,118 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சியை பாஜக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP leads All 3 seats in Karnataka, Telengana By Polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X