பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நைட் டின்னர், தூக்கம் எல்லாம் சட்டமன்றத்திலேயே.. விதான் சவுதாவில் முகாமிட்ட பாஜக எம்எல்ஏ-க்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Floor Test : இரவு முழுவதும் பேரவையில் தூங்கிய பாஜக உறுப்பினர்கள்

    பெங்களூரு: கர்நாடக அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக எம்எல்ஏ-க்கள் அனைவரும் சட்டமன்றத்திலேயே இரவு சாப்பாட்டையும் முடித்து கொண்டு அங்கேயே படுத்து தூங்கினர்.

    கர்நாடகத்தில் நேற்று பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக மற்றும் ஆளும் கூட்டணி அரசு எம்எல்ஏ-க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    BJP legislators stay in karnataka assembley and Night sleep and food in Assembly

    இதனையடுத்து நேற்று மட்டும் அமளி காரணமாக கர்நாடக பேரவை மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே தீர வேண்டும் என்று அடம்பிடித்த பாஜக-வினர், பேரவை நடைபெற்ற போதே ஆளுநரை சந்தித்து முறையிட்டனர்.

    ஆளும் கூட்டணி அரசு வேண்டுமென்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுத்தடிப்பதாக புகார் கூறினர். இதனையடுத்து நேற்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டார் கர்நாடக ஆளுநர்.

    ஆனால் கடும் அமளி காரணமாக பேரவையை இன்று காலை வரை ஒத்தி வைத்தார் துணை சபாநாயகர். எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி விடலாம் என்றெண்ணிய பாஜக எம்எல்ஏ-க்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஆளுநர் முதல்வர் குமாரசாமிக்கு இன்று பிற்பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.

    இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் வரை சட்டமன்றத்தை விட்டு நகர்வதில்லை என முடிவெடுத்த பாஜக எம்எல்ஏ-க்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்படி நேற்று இரவு முழுவதும் பேரவையினுள் தங்க முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்களுக்கு தேவையான இரவு உணவுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு உணவை முடித்து விட்டு எடியூரப்பா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏ-க்கள் அனைவரும் சட்டமன்றத்திலேய படுத்து தூங்கினர்.

    காலை தூங்கி எழுந்த பாஜக எம்எல்ஏ-க்களில் சிலர் கர்நாடக சட்டமன்றம் அமைந்துள்ள விதான் சவுதா வளாகத்தில் நடை பயிற்சியும் மேற்கொண்டனர்.

    நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரி இரவு முழுவதும் கர்நாடக சட்டமன்றத்திலேயே தங்கி விட்ட பாஜக எம்எல்ஏ-க்களின் செயல் அம்மாநில அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.

    English summary
    In the wake of the uproar in the Karnataka constituency, all BJP MLAs slept in the assembly and ended the night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X