• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஹோட்டல் ரூமில்.. இளம் பெண்ணுடன் கட்டி புரண்ட பாஜக அமைச்சர்.. வெட்கமாக இல்லை.. சீறி பாய்ந்த காங்!

|

பெங்களூரு: மறுபடியும் கர்நாடக பாஜகவில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.. இதற்கு காரணம் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி... இவரை முன்னெடுத்துதான் எதிர்க்கட்சிகள் கொந்தளித்துக் கொதித்தெழுந்துள்ளன... குறிப்பாக சித்தராமையா செம டென்ஷனில் எகிறி உள்ளார்.. அசிங்க அசிங்கமாக கேள்வி கேட்டுள்ளார்.

  கர்நாடக அமைச்சரின் கசமுச படம்… போராட்ட களத்தில் குதித்த காங்கிரசார்!

  சில வருடங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் சிசிபாட்டீல், கிருஷ்ண பாலேமர், லட்சுமண் சவதி ஆகியோர் ஆபாச வீடியோ பார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையானது.. தேசிய அளவில் அது எதிரொலித்தது..

  இளம் பெண்ணுடன் கெஸ்ட் ஹவுசில்.. கர்நாடக அமைச்சரின் "ச்சீச்சீ" வீடியோ.. 5 மாநில "தேர்தலால்" ராஜினாமா

  அந்த சம்பந்தப்பட்ட 3 பேருமே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.. ஆனாலும், அவர்களில் லட்சுமண் சவதி துணை முதல்வராகவும், சி.சி.பட்டீல் அமைச்சராகவும் பதவியில் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்..

   ஆபாச வீடியோ

  ஆபாச வீடியோ

  இதற்கு பிறகு கடந்த மாதம், கர்நாடக சட்ட மேலவை கூட்ட தொடர் நடந்து கொண்டிருந்தபோது, அவையில் காங்கிரஸ் எம்எல்சி ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்த சம்பவம் அதற்கு மேல் அதிர்ச்சியையும், பரபரப்பையும் தந்தது.. ஒருவழியாக அந்த பிரச்சனையும் மறக்கடிக்கப்பட்ட நிலையில், இன்னொரு விவகாரம் இதுபோலவே எழுந்துள்ளது.

   பரபரப்பு

  பரபரப்பு

  கர்நாடக அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவர் ரமேஷ் ஜர்கிஹோலி... நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார்.. இவர் வீடியோ ஒன்று திடீரென பரபரப்பை கிளப்பியது.. ஒரு அடையாளம் தெரியாத பெண்ணோடு தனிமையில் உறவு கொண்டிருப்பது போல அந்த வீடியோ வெளியாகியிருந்தது. ஒரு சில கன்னட டிவிக்கள் இந்த வீடியோவை ஒளிபரப்பின..

   ஹோட்டல் ரூம்

  ஹோட்டல் ரூம்

  அந்த வீடியோ ஹோட்டல் ரூமில் எடுக்கப்பட்டுள்ளது.. பெட்ரூமில் ஒரு இளம்பெண்ணுடன் ரமேஷ் ஜார்கிகோலி அரைகுறை டிரஸ்ஸில் ஆபாசமான முறையில் இருப்பது போன்று காட்சிகள் இருந்துள்ளன போலும்.. அதே படுக்கையில், பெண்ணுடன் படுக்கையில் உருண்டும் புரண்டும் உள்ளார்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணியும் மெல்ல வெளியாகி வருகிறது.

  புகார்

  புகார்

  இது உண்மையா? பொய்யா? வதந்தியா? யாராவது வேண்டுமென்றே திட்டமிட்டு கிளப்பிவிடப்பட்ட அவதூறா? என்ற குழப்பம் எழுந்த நிலையில்தான், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி, அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டதாக போலீசாரிடம் புகார் தந்தார்.

   ஏழை பெண்

  ஏழை பெண்

  அந்த புகாரில், "ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் அந்த பெண், ஒரு ஷார்ட் பிலிம் தயாரிக்க அமைச்சரை அணுகியபோது, கர்நாடக பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை தருவதாக உறுதியளித்துள்ளார்.. அப்போதுதான், அமைச்சர் அப்பெண்ணை பாலியல் ரீதியாக ஏமாற்றினார். அந்தப் பெண்ணிடம் சிடிக்கள், வீடியோக்கள் இருப்பதை அவர் அறிந்ததும், அப்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்துகிறார்..

  ஆடியோ

  ஆடியோ

  நான் ஒரு சமூக செயல்பாட்டாளராக இருப்பதால், இதுகுறித்த புகாரோடு என்னை அணுகினர்.. அதனால், இதில் உண்மை தன்மையை விசாரித்து, அமைச்சர் மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்து, பாதிக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதுதான் பாஜக அரசுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வீடியோ மட்டுமல்ல, அந்த பெண்ணுடன் அமைச்சர் பேசிய வாட்ஸ்அப் ஆடியோவும் வெளியாகி உள்ளதாக தெரிகிறது..

  சிக்கல்

  சிக்கல்

  அன்று பாஜக உறுப்பினர்கள் ஆபாச வீடியோ சர்ச்சையில் மாட்டினார்கள், பிறகு காங்கிரஸ் உறுப்பினர் சிக்கினார்.. இப்போது மறுபடியும் பாஜக அமைச்சர் சிக்கி உள்ளார்.. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு புகார்கள் கர்நாடக அரசு மாதிரி வந்தது இல்லை.. ஊழல், லஞ்சம், உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பெருவாரியான மாநிலங்களில் எழுமே தவிர, ஆபாச வீடியோக்களில் அதிகமாக சிக்கியது அநேகமாக இந்த கர்நாடக அரசுகளாகத்தான் இருக்கும்.

   ராஜினாமா

  ராஜினாமா

  தற்போது இந்த அமைச்சர் மீதான புகார், நிச்சயம் தங்கள் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்று பாஜகவே கருதுகிறது.. அதனால், அந்த அமைச்சர், பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.. இன்னொரு பக்கம், அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரசார் போராட்டத்தில் குதிக்க தொடங்கினர்..

  ஹேப்பி

  ஹேப்பி

  அவரது ராஜினாமா மட்டும் போதாது... அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் சித்தராமையா .. இந்த நிலையில்தான், பாஜக அரசுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்பதால், தானாகவே முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அமைச்சர்...!

  கொந்தளிப்பு

  கொந்தளிப்பு

  இந்த விவகாரத்தில் சித்திராமையா இந்த அளவுக்கு கொந்தளிக்க இன்னொரு காரணமும் உண்டு. அதாவது ஒரு காலத்தில் சித்தராமையா ஜார்கிகோலியை ரொம்பவே நம்பியிருந்தார், சித்தராமையாவின் விசுவாசியாகவும் அவர் திகழ்ந்து வந்தார். அதைத் தகர்த்து விட்டுத்தான் பின்னர் அவர் பாஜகவுக்கு பல எம்எல்ஏக்களைக் கூட்டிக் கொண்டு போனார். இப்போது அந்த ஜார்கிகோலி இப்படி வசமாக சிக்கியிருப்பதால் காங்கிரஸ் தரப்பு குறிப்பாக சித்தராமையா குரூப் ரொம்ப ஹேப்பியாக உள்ளதாம்.

   
   
   
  English summary
  BJP minister cheating young woman in Karnakata
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X