பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவரு போட் ஓட்டுற ஸ்டைலுக்கு 5 ரூபாய் கூட தரக் கூடாது.. வெள்ளத்திலும் பப்ளிசிட்டி தேடிய பாஜக எம்எல்ஏ!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் வெள்ளத்தில் போது மக்களை படகில் மீட்பது போல் சீன் போடும் இந்த எம்எல்ஏ ரேணுகாச்சார்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கன்வாரில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் தண்டவாளங்கள் பெயர்ந்துவிட்டன. இதையடுத்து அவ்வழியாக செல்லும் கொங்கன் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

நிஜ பாகுபலி.. இரு கரங்களில் சிறுமியரை மீட்டு வெள்ளத்தில் சிங்கம் போல நடந்து வந்த சூப்பர் காப்! நிஜ பாகுபலி.. இரு கரங்களில் சிறுமியரை மீட்டு வெள்ளத்தில் சிங்கம் போல நடந்து வந்த சூப்பர் காப்!

கனமழை

கனமழை

மொத்தமுள்ள 14 மலை சாலைகளில் 11 சாலைகள் மூடப்பட்டுள்ளன. பெல்காம், ஹூப்ளி, தர்வாட், சிமோகா, கர்வார், மங்களூர், மடிகேரி உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மலநாடு பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது. மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் நீர் மட்டம் அதிகமாக காணப்படுகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் காப்பாற்றி வருகின்றனர்.

பரிசல்

பரிசல்

இந்த நிலையில் ஹொன்னாலி மாவட்டத்தில் பேலிமல்லூர் கிராமத்தில் வெள்ளநீர் சூழந்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்களை மீட்கும் பணிகளை பார்வையிட பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா சென்றார். அப்போது சில மக்களை பரிசலில் ரேணுகாசார்யா மீட்டார்.

காப்பாற்றிய மக்கள்

காப்பாற்றிய மக்கள்

அதுவும் இடுப்புக்கு மேல் வெள்ளம் இருந்த பகுதிகளில் இருந்தவர்களை மீட்புக் குழுவினர் பரிசலில் அழைத்து வந்தனர். அப்போது பாதி வழியில் தான் பரிசலை இயக்குவதாக ரேணுகாசார்யா சென்றார். பார்த்தால் முழங்காலுக்கு குறைவாக உள்ள நீரில் பரிசலை வேகமாக இயக்குவது போல் இயக்கி ஏதோ தான்தான் அந்த மக்களை காப்பாற்றியது போல் பில்டப் கொடுத்தார்.

ஜீரோ.. ஹீரோ

இதை பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தனர். வெற்று விளம்பரத்துக்காக இதுபோல் காரியங்களை செய்து வருவோர் மத்தியில் குஜராத் போலீஸ்காரர் பிரித்விராஜ் ஜடேஜா அந்த இரு குழந்தைகளையும் தோளில் சுமந்து ஓடும் இடுப்பளவு வெள்ள நீரில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தூக்கி கொண்டு காப்பாற்றிய சம்பவத்தை அடுத்து ஜடேஜாவை மக்கள் பாராட்டி வருகின்றனர். இதில் ரேணுகாச்சார்யா ஜீரோ என்றும் ஜடேஜா ஹீரோ என்றும் பாராட்டி வருகின்றனர்.

English summary
BJP MLA, MP Renukacharya rows an Agarala boat (coracle) through flood-waters in Belimallur village in Honnali in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X