• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் இருப்பது பாஜக "முக்கிய புள்ளி.."- எஸ்.வி.சேகர் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் இருப்பதாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவரை முதல்வராக்க பாஜக தலைமை திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு

ஆனால், எடியூரப்பாவை பதவியிலிருந்து விலக விடமாட்டோம் என்று லிங்காயத்து மடாதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

 இழுபறி நிலை

இழுபறி நிலை

அதேநேரம், எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு பாஜக மாநில தலைவர் பதவியிடத்தை கொடுத்தால் எடியூரப்பா பதவி விலக ரெடி எனக் கூறப்படுகிறது. 2 வருடங்கள் கழித்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளபோது, எடியூரப்பா மகன் பாஜக தலைவராக இருந்தால் விரும்பியவர்களுக்கு போட்டியிட டிக்கெட் தர முடியும், கட்சி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என எடியூரப்பா நினைக்கிறார். இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் இழுபறி நிலையே நீடிக்கிறது.

 லிங்காயத்துகள் ஆதரவு

லிங்காயத்துகள் ஆதரவு

எடியூரப்பாவை திருப்திப்படுத்தாமல் முதல்வர் பதவியிலிருந்து விலக பாஜக தலைமை நிர்பந்தித்தால், லிங்காயத்துகள் மொத்தமாக காங்கிரசுக்கு தங்கள் ஆதரவை திருப்புவார்கள் என்ற நிலைதான் அங்கே உள்ளது. இப்படியெல்லாம் திடீரென குழப்பம் ஏற்பட காரணம் என்ன என்ற கேள்விகள் எழும் நிலையில், எஸ்.வி.சேகர் அதுகுறித்து, சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

 எஸ்.வி.சேகர் பேட்டி

எஸ்.வி.சேகர் பேட்டி

"ஒன்இந்தியா தமிழ்" தளத்திற்கு எஸ்.வி.சேகர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், இதுபற்றி கூறியதாவது: எடியூரப்பாவை திருப்திப்படுத்தாமல், முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால், அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும். வயதை காரணம் காட்டி அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது. அவர் இன்னும் அரசியலில் ஆக்டிவாக உள்ள அரசியல்வாதியாகும்.

குழப்பங்கள் பின்னணியில் பி.எல்.சந்தோஷ்

குழப்பங்கள் பின்னணியில் பி.எல்.சந்தோஷ்

இந்த குழப்பங்களுக்கு பின்னணியில் இருப்பது பி.எல்.சந்தோஷ்தான். அவரை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று காய் நகர்த்துகிறார். எடியூரப்பாவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு இவருக்கு கிடையாது. எனவே, அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகத்தான் இருக்கும்.

டெல்லியில் லாபி

டெல்லியில் லாபி

ஏற்கனவே சந்தோஷ் இப்படியான குழப்பங்களை ஏற்படுத்தியதால்தான் தற்போது, ஓரம் கட்டப்பட்டுள்ளார். இதனால் டெல்லியிலுள்ள பாஜக தலைவர்களிடம், எடியூரப்பாவுக்கு எதிராக தொடர்ந்து மூவ் செய்து வந்துள்ளார். பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உரிய வகையில் முடிவெடுத்து எடியூரப்பா அதிருப்தியடைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

தண்ணீர் திறந்து விட்டால் சரிதான்

தண்ணீர் திறந்து விட்டால் சரிதான்

கர்நாடகாவில் யார் முதல்வராக வருவது சரியானதாக இருக்கும் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுபவர் யார் முதல்வராக வந்தாலும் நல்லதுதான். தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்தவர் என்ற முறையில் நான் அப்படித்தான் யோசிப்பேன் என்று தனது டிரேட் மார்க் சிரிப்போடு பேட்டியை முடித்துக் கொண்டார் எஸ்.வி.சேகர்.

English summary
Karnataka politics exclusive: Actor turned politician and BJP leader from Tamil Nadu S. Ve. Shekher has accused BJP National General Secretary (Organisation) B.L.Santhosh of being behind the political turmoil in Karnataka. In an exclusive interview with OneIndia Tamil, S. Ve. Shekher said, "If BS Yediyurappa is removed from office, with out satisfing him, it will be a major setback for the BJP." He cannot be removed from office on the grounds of age. He is still a politician active in politics, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X