பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்போது ஆட்சி அமைக்க வேண்டாம்.. தேர்தலை சந்திக்கலாம்.. பாஜக போடும் அதிரடி பிளான்.. என்ன நடக்கிறது?

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு பதிலாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    karnataka assembly | ஒரே வாரத்தில் கர்நாடக சட்டசபையில் இத்தனை விஷயங்கள் நடந்துவிட்டதா!

    பெங்களூர்: கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு பதிலாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து பாஜக அங்கு இப்போது உடனே ஆட்சி அமைக்காமல் போக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    நேற்று கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழ்ந்துள்ளது.

    குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் பெரும்பான்மை இல்லாமல் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

    அடுத்து ம.பி.. பின் ராஜஸ்தான்.. அமித் ஷாவின் அதிரடி பிளான்.. அகண்ட பாரத கனவை நெருங்கும் பாஜக!அடுத்து ம.பி.. பின் ராஜஸ்தான்.. அமித் ஷாவின் அதிரடி பிளான்.. அகண்ட பாரத கனவை நெருங்கும் பாஜக!

    என்ன ராஜினாமா

    என்ன ராஜினாமா

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததால் எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளார் என்கிறார். விரைவில் முதல்வராகப் எடியூரப்பா பொறுப்பு ஏற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அதே சமயம் பாஜக இப்போது உடனடியாக ஆட்சி அமைக்காமல் சில நாட்கள் அங்கு ஆளுநர் ஆட்சியை கொண்டு வர வாய்ப்புள்ளது. ஒரு வாரத்திற்கு பின் அங்கு பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்கலாம், அல்லது நேரடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துவிட்டு, பின் தேர்தலை சந்திக்கலாம் என்று பாஜக நினைக்கிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் - மஜதவில் இருந்து 16 பேர் ராஜினாமா செய்துள்ளதால், அங்கு சட்டசபை பலம் 209 ஆக குறைந்துள்ளது. இதனால் பெரும்பான்மை பெற 105 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 102 ஆக குறைந்துள்ளது. பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது.

    சரியாக உள்ளது

    சரியாக உள்ளது

    இதனால் தற்போது பாஜக அங்கு பிரச்சனை இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியும். அடுத்த 6 மாதத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் சரியாக 105 எம்எல்ஏக்கள் இருப்பதால் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலைக்கு செல்லும். இடைத்தேர்தலை சந்திக்கும் வரை மதில் மேல் பூனை கதையாக பயந்து பயந்து ஆட்சி செய்ய வேண்டி இருக்கும்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    தற்போது கர்நாடகாவில் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலை நிலவி உள்ளது. லோக்சபா தேர்தலிலும் கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றிபெற்றது. இப்போது கர்நாடகாவில் தேர்தலை சந்தித்தால் 115 இடங்களுக்கும் மேல் தனியாக பாஜக வெல்ல வாய்ப்புள்ளது. இதனால் பாஜக அதிகபட்சம் தேர்தலை சந்திக்கவே விரும்பும் என்கிறார்கள்.

    அடிபட்ட புலி

    அடிபட்ட புலி

    அடிபட்ட புலியாக இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கலாம். இதனால் தேர்தலை சந்தித்து அறுதிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்க விரும்புவதாக தெரிகிறது. இதனால் இன்று எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோருவது சந்தேகம்தான் என்கிறார்கள்.

    என்னவெல்லாம் நடக்கும்

    என்னவெல்லாம் நடக்கும்

    பின் வரும் விஷயங்களில் எதாவது ஒன்று வரும் நாட்களில் கர்நாடகாவில் நடக்க வாய்ப்புள்ளது

    1. எடியூரப்பா ஆட்சி.

    2. குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்து பின் தேர்தலை நடத்துவது.

    English summary
    BJP plans to get the power after the election may go for the presidential rule in Karnataka state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X