India
  • search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Why Blood.. Same Blood: பாஜகவின் அரசியல் ”கேவலமானது”... நானும் பாதிக்கப்பட்டேன் - குமாரசாமி குமுறல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: நாட்டில் பிற கட்சிகள் ஆட்சி செய்வதை பொறுக்க முடியாமல் பாரதிய ஜனதா கட்சி கேவலமான அரசியல் செய்து வருவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி தெரிவித்து இருக்கிறார்.

பெங்களூருவில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையகமான ஜே.பி.பவனில் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'ஆபரேசன் தாமரை' என்ற திட்டத்தை பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கொண்டு வந்தார்.

 ஆப்பரேசன் தாமரை

ஆப்பரேசன் தாமரை

இந்த ஆப்பரேசன் தாமரை திட்டத்தின்கீழ் மாநில அரசை கவிழ்த்து பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கினர். பாஜகவின் அதிகார தாகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் எந்த அரசும் பாஜகவின் அதிகார தாகத்துக்கு முன்னாள் நிற்க முடியாது. பெரும்பான்மையாக வெற்றிபெற்ற கட்சிகளைக் கூட ஆட்சியமைக்க பாஜக அனுமதிக்காது.

கேவலமான அரசியல்

கேவலமான அரசியல்

தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஆளும் சிவசேனா அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறுவதாக பாஜக சொல்கிறது. மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தை வைத்து ஒருதரப்பு கேவலமான அரசியலை செய்து வருகிறது என்றால் அது வேறு யாருமல்ல.. பாஜகதான். அதில் எந்தவிதமான சந்தேகமும் எனக்கு கிடையாது. கர்நாடகாவில் நானும் இதை அனுபவப்பட்டு இருக்கிறேன்.

பொய் பிரச்சாரம்

பொய் பிரச்சாரம்

கர்நாடகாவில் நான் முதலமைச்சராக இருந்தபோது எம்.எல்.ஏக்களை நம்பவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாக நடத்தப்படவில்லை என்ற பொய் பிரச்சாரத்தை அவர்கள் கையில் எடுத்தனர். நான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக மட்டுமே ரூ.19,000 கோடியை ஒதுக்கினேன். அந்த பட்டியலையும் கட்சியின் சட்டமன்றத் தலைவரிடம் வழங்கினேன்.

    Presidential Election-க்கு வேட்புமனுத் தாக்கல் செய்த Draupadi Murmu... அதிமுக பங்கேற்பு!
    அரசியலமைப்பு பாதுகாப்பு

    அரசியலமைப்பு பாதுகாப்பு

    எப்படியோ ஒரு வழியாக பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து ஆப்பரேசன் தாமரையை நடத்தி எனது அரசை கலைத்துவிட்டது. இன்று மகாராஷ்டிராவில் பாஜகவின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. நாடு முழுவதும் அவதூறுகளை அக்கட்சி பரப்பி வருகிறது. இந்தியாவில் இன்று அரசியலமைப்பு பாதுகாப்பு என்பதே இல்லாமல்போய்விட்டது.

    English summary
    BJP Playing dirty politics in Maharashtra likewise in Karnataka: நாட்டில் பிற கட்சிகள் ஆட்சி செய்வதை பொறுக்க முடியாமல் பாரதிய ஜனதா கட்சி கேவலமான அரசியல் செய்து வருவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி தெரிவித்து இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X