பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் பறக்கிறது பாஜக கொடி.. காங்-மஜத கூட்டணி நிலை பரிதாபம்.. எக்ஸிட் போல் முடிவுகள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பாஜக அலை வீசுவதாகவே பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவின் பிரபல கன்னட செய்திச் சேனல்களான டிவி 9 மற்றும் சுவர்னா நியூஸ் ஆகியவை வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் இன்று மாலை வெளியாகின.

BJP seems to be sweeping in Karnataka: Exit polls says

இதன்படி, மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 18 தொகுதிகளை பாஜக வெல்லும் என்றும், 9 தொகுதிகளை காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணி வெல்லும் என்றும், டிவி9 தெரிவிக்கிறது. இதர கட்சிகள் பிரிவில் 1 தொகுதியில் வெல்லவாய்ப்புள்ளது என கூறுகிறது இந்த எக்ஸிட் போல்.

சுவர்ணா டிவி எக்ஸிட் போல் பொறுத்தளவில், பாஜக 18 முதல் 20 தொகுதிகளை வெல்லக் கூடுமாம். காங்கிரஸ்-மஜத கூட்டணி 7-10 தொகுதிகளையும், பிறர் 1 தொகுதியையும் வெல்ல கூடும்.

இந்த நிலையில், இந்தியா டுடே ஆங்கில செய்திச் சேனல் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், கர்நாடகாவில் பாஜக 21-25 தொகுதிகளை வென்று வாரிச் சுருட்டும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு 3-6 தொகுதிகள் மட்டுமே கிடைக்க கூடுமாம். பிற கட்சிகள் 1 தொகுதியை வெல்லக் கூடும் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.

இதில், காங்கிரஸ் 2-3 தொகுதிகளிலும், மஜத மட்டும் 1-3 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் விளக்கமாக கூறுகிறது இந்தியா டுடே கருத்துக் கணிப்பு.

English summary
BJP seems to be sweeping in Karnataka, says India Today Exit polls and Kannada channel exit polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X