பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வேலை இதுதான்.. இன்று மாலையே நடவடிக்கை.. எடியூரப்பா எடுத்த கசப்பான முடிவு

பாஜக தலைவர் எடியூரப்பா ஆட்சி பொறுப்பேற்றதும் இன்று மாலையே முக்கியமான அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Yediyurappa Master Plan : ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வேலை இதுதான்.. எடியூரப்பாவின் முடிவு- வீடியோ

    பெங்களூர்: பாஜக தலைவர் எடியூரப்பா ஆட்சி பொறுப்பேற்றதும் இன்று மாலையே முக்கியமான அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்து மூன்று நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்த பாஜக இன்று மாலை ஆட்சி பொறுப்பேற்கிறது.

    பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையிலான அரசு இன்று மாலை பதவி ஏற்க உள்ளது. அவருடன் சில அமைச்சர்கள் பதவி ஏற்க இருக்கிறார்கள்.

    நீக்கம்

    நீக்கம்

    16 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் - மஜத கூட்டணியில் இருந்து ராஜினாமா செய்ததால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோரை நேற்று இரவு சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். மீதமுள்ளவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஏன் இல்லை

    ஏன் இல்லை

    இந்த மீதம் இருக்கும் 13 பேரில் குறைந்தது 6 எம்எல்ஏக்கள் திரும்பி தங்கள் கூட்டணிக்கே வர வேண்டும் என்று காங்கிரஸ் - மஜத கூட்டணி நினைக்கிறது. அதாவது 6 அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்து மீண்டும் தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்தால், பாஜகவால் சட்டசபையில் 105 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    கடைசி நேரத்தில் சில எம்எல்ஏக்கள் தங்கள் கூடாரத்திற்கு திரும்பி வந்தால் எடியூரப்பாவிற்கு செக் வைக்கலாம் என்று காங்கிரஸ் - மஜத கூட்டணி நினைக்கிறது. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கவே சபாநாயகர் ரமேஷ் குமார் 13 பேரை மட்டும் இன்னும் தகுதி நீக்கம் செய்யாமல் இருக்கிறார். கடைசி நேரத்தில் இவர்கள் மனம் மாறலாம் என்று காங்கிரஸ் - மஜத கூட்டணி நினைக்கிறது என்கிறார்கள்.

    இன்று என்ன

    இன்று என்ன

    இதை முறியடிக்க தற்போது எடியூரப்பா புதிய திட்டம் போட்டுள்ளார். எடியூரப்பா இன்று மாலை பதவி ஏற்றவுடன் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இன்று மாலை எடியூரப்பா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றதும், சபாநாயகர் மாற்றப்படுவார்.

    அடுத்து என்ன நடக்கும்

    அடுத்து என்ன நடக்கும்

    அதன்பின் புதிய சபாநாயகர் பதவி ஏற்றதும் அவர் 13 எம்எல்ஏக்களின் ராஜினாமாவையும் ஏற்றுக்கொள்வார் என்று கூறுகிறார்கள். உடனடியாக 16 காலி இடங்கள் சட்டசபையில் ஏற்படும். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் சபைக்கு வர வாய்ப்பில்லாமல் போகும். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 105 இடங்கள் இருந்தால் போதும்.

    உடனே நடக்கும்

    உடனே நடக்கும்

    இதன் மூலம் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது பிரச்சனைக்கு உள்ளாக மாட்டார். ஆகவே இன்று மாலையே புதிய சபாநாயகர் பதவி ஏற்று, அவர் 13 அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது. எடியூரப்பா தன் அரசு நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்த சிக்கலும் வர கூடாது என்று இப்படி செய்ய இருக்கிறார் என்கிறார்கள்.

    English summary
    BJP will accept the resignation of 13 MLAs after taking oath in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X