பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடியூரப்பா தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானம், சட்ட விரோதமானது.. சட்டசபையில் சித்தராமையா விளாசல்

Google Oneindia Tamil News

பெங்களூர்: எடியூரப்பா தாக்கல் செய்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் சட்டவிரோதமானது என்று சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.

எடியூரப்பா இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்த பிறகு, அதன் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். அப்போது பேசிய சித்தராமையா, "எடியூரப்பா என்னைப்போலவே 1980களில் அரசியலுக்கு வந்தவர். ஆனால் இதுவரை ஒருமுறை கூட முழு பெரும்பான்மையுடன் அவரால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. பாஜகவுக்கு கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவளிக்கவில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

BJP will be able to give a stable government, says Siddaramaiah

இப்போது முதல்வராகியுள்ளார். அவர் எஞ்சிய பதவி காலத்தை முதல்வராக பூர்த்தி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அது நடக்காது என்பதே கள நிலவரம். சில எம்எல்ஏக்களை திருப்திப்படுத்தி, ஆட்சியை கலைத்து முதல்வர் நாற்காலியில் வந்து அமர்ந்துள்ளார். எடியூரப்பா தாக்கல் செய்துள்ள நம்பிக்கைத் தீர்மானம் என்பது சட்டவிரோதமானது. ஜனநாயக விரோதமானது. அதற்கு எங்களது ஆதரவு இல்லை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

English summary
Here is no chance that BJP will be able to give a stable government, says CLP leader Siddaramaiah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X