பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் காங்கிரசுக்கு அடி.. 2 தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி- சி வோட்டர் எக்சிட் போல்

Google Oneindia Tamil News

பெங்களூர்: ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சிரா ஆகிய சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்று சி வோட்டர்-டிவி 9 எக்சிட் போல் தெரிவிக்கிறது.

பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3 ம் தேதி நடைபெற்றது. இங்கு 45.24 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இந்த நிலையில், பல்வேறு சேனல்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கணக்கெடுப்புகளின் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. அதில், பாஜகவின் முனிரத்னா மீண்டும் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதிஷ்.. தனிப்பெரும் கட்சியாகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்- ஏபிபி எக்சிட் போல்பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதிஷ்.. தனிப்பெரும் கட்சியாகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்- ஏபிபி எக்சிட் போல்

மும்முனை போட்டி

மும்முனை போட்டி

ஆர். ஆர். நகரில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும் ஜேடிஎஸ்சும் இருப்பதால் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. காங்கிரஸைச் சேர்ந்த குசுமா, ஜே.டி.எஸ்ஸிலிருந்து வி.டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி போட்டியிலிருந்தனர். இங்கு வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

 பாஜக வெற்றி

பாஜக வெற்றி

இதனிடையே சி-வோட்டர் நடத்திய வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, பாஜக வேட்பாளர் முனிரத்னா 37.8% சதவீதம் ஓட்டு பெற்று வெற்றி பெறுவார். காங்கிரஸின் குசுமா 31.1 சதவீதமும், வி.டி.எஸ். கிருஷ்ணமூர்த்திக்கு 14 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வேட்பாளர்கள் 17.2 சதவீத வாக்குகளைப் பெறுவார்கள். இதை டிவி 9 மற்றும் பப்ளிக் டிவி ஆகிய கன்னட சேனல்கள் ஒளிபரப்பின.

 சிரா இடைத் தேர்தல்

சிரா இடைத் தேர்தல்

தும்கூர் மாவட்டம் சிராவில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும், பாஜக வெல்லப்போகிறது என்கிறது எக்சிட் போல் முடிவுகள். சிரா தொகுதியில் இடைத்தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. 84.54 சதவீத வாக்குப்பதிவு பதிவானது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது.

 இங்கும் மும்முனை போட்டி

இங்கும் மும்முனை போட்டி

சிரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டாக்டர். ராஜேஷ் கவுடா வெற்றி பெறுவார். டாக்டர். ராஜேஷ் கவுடா 36.6 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது என்கிறது சி வோட்டர். காங்கிரஸ் வேட்பாளர் டி பி.ஜெயச்சந்திராவுக்கு 32.5 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஜே.டி.எஸ் வேட்பாளருக்கு 17.4% வாக்குகள் கிடைக்கும் என்று சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கர்நாடக அரசியல்

கர்நாடக அரசியல்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் தற்போது பாஜகவின் பலம் 116 என்ற அளவுக்கு இருக்கிறது. எனவே இவ்விரு தொகுதிகளும் பாஜகவுக்கு போனசாக கிடைக்கப்போகிறது. ராஜராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற முனிரத்தினா, கடந்த வருடம் ஜூலையில் கட்சி தாவி பாஜகவில் சேர்ந்தார். எனவே அங்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. அவரையே மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளதாக எக்சிட் போல் கூறுகிறது. சிரா தொகுதியில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சத்யநாராயணா என்பவர் வெற்றி பெற்ற நிலையில், அவர் மரணமடைந்தார். எனவே அதற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

English summary
According to the C-voter exit polls, the BJP will win the by-elections in Rajarajeswari Nagar and Sira assembly constituencies in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X