பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆயிரம் கோடியில் ஆபரேஷன் தாமரை.. மாஃபியா பாணியில் கடத்தல்! பாஜகவுக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: 14 ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா, மும்பை நட்சத்திர ஹோட்டலில் ஒன்றாக சேர்ந்து தங்கியிருத்தல், பெங்களூரிலிருந்து பாஜக தலைவர்கள் உதவியுடன், தனி விமானத்தில் மும்பை பறந்து செல்தல், எம்எல்ஏக்களை சந்திக்க சென்ற, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் மும்பை போலீசாரால் கைது.. இப்படியாக நீள்கிறது கர்நாடக அரசியல் களேபரம்.

இத்தனை குழப்பங்கள் பின்னணியிலும் பாஜகதான் இருப்பதாக இதுவரை கர்நாடக ஆளும் கட்சிதான் கூறி வந்தது. இப்போது, தேசிய அளவில், டிவிட்டரில்
#BJPKidnapsMLAs என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டாகி கொண்டிருப்பதை பார்த்தால், நெட்டிசன்களும், இதையே சொல்வது உறுதியாகியுள்ளது.

1000 கோடி மதிப்பில் ஆபரேஷன் கமலா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது என சிலர் கூறினால், சிலரோ, இது முழுக்க மாஃபியா பாணி கடத்தல் என விளாசுகிறார்கள். இதோ நீங்களே பாருங்கள். நெட்டிசன்கள் சொல்வதை.

இது ஓகேவா..? மும்பையிலிருந்து சபாநாயகருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் வந்த எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் இது ஓகேவா..? மும்பையிலிருந்து சபாநாயகருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் வந்த எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம்

மாஃபியா பாணி

பாஜக ஆபரேஷன் கமலா திட்டம் இப்படி நடக்கிறது:

  • பணம் மற்றும் அமைச்சர் பதவி வழங்குதல்
  • பிற மாநிலங்களின் ரிசார்ட்டுக்கு மாறுங்கள்
  • எம்.எல்.ஏ.க்களின் தொலைபேசிகளை பிடுங்கி செல்லுங்கள்
  • எம்எல்ஏக்களை சுற்றிலும் பாஜக தலைவர்களைச் 24/7 மணி நேரம் பாதுகாப்புக்கு நிறுத்துதல்
  • காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பதை தடுத்து நிறுத்துவது.
  • ஆக மொத்தம், அமித்ஷாவும், எடியூரப்பாவும், மாஃபியா போல அரசியல் செய்கிறார்கள்!

ஹோட்டல் முன்பதிவு

நான் டெல்லியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்துவிட்டு, கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளேன். நான் பயப்படுவதால், XYZ என யாராவது ஒரு நபரை ஹோட்டலுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அந்த கடிதத்தில் நான் கேட்டுக்கொள்வேன். போலீசாரும் அதிரடிப் படையை ஹோட்டலுக்கு வெளியே நிறுத்துவார்களா? இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் இந்த நெட்டிசன். டி.கே.சிவகுமாரை மும்பை ஹோட்டலுக்குள் அனுமதிக்காததைதான் இவ்வாறு கிண்டல் செய்கிறார் இவர்.

ஜனநாயக கொலை

பாஜக ஜனநாயகத்தை எவ்வாறு தோற்கடிக்கிறது பாருங்கள்-

எம்.எல்.ஏ.க்களுக்கு நூற்றுக்கணக்கான கோடியை வழங்குவதன் மூலம் குதிரை வர்த்தகத்தில் ஈடுபடுவது

பட்டப் பகலில் எம்.எல்.ஏ.க்களை கடத்துவது.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலைக்க கருப்பு பணம், அதிகாரம் மற்றும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துதல். இப்படி சொல்கிறார் இவர்.

1000 கோடி

ஊழல் நிறைந்த கட்சி பாஜக. கர்நாடக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க 1000 கோடி செலவழிக்கிறது. எங்கிருந்து இந்த பெரிய தொகை உங்களுக்கு கிடைத்தது. இப்படி கேட்கிறார் இவர்.

ஜனநாயகம் காக்க

பாஜகவினர் ஆறு முறை முயற்சித்து பரிதாபமாக தோல்வியடைந்துள்ளனர், இந்த முறையும் ஜனநாயகம் மேலோங்கி, ஜனநாயகம் காக்கப்படும் என்று நம்புகிறேன். இப்படி சொல்கிறார் இந்த நெட்டிசன்.

English summary
#BJPKidnapsMLAs is trending Nationwide in Twitter after Karnataka political crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X