India
  • search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரிசப்ஷனில் போட்டோ எடுத்த மணப்பெண்.. திடீரென மயங்கி விழுந்து.. நெஞ்சை உருக்கிய உடல் "உறுப்பு தானம்"

Google Oneindia Tamil News

பெங்களூரு: மணமேடையில் போட்டோ எடுத்து கொண்டிருந்த மணப்பெண் திடீரென மயங்கி விழுந்த சம்பவமும், அதையொட்டி அப்பெண்ணின் பெற்றோர் எடுத்த முடிவும் பெரும் பாராட்டை பொதுமக்களிடமிருந்து பெற்று வருகிறது.

சமீபகாலமாக உடல் உறுப்பு தானங்கள் பெருகி வருகின்றன.. மரணம் என்பதே யாராலும் தாங்க முடியாத நிலையில், அந்த நேரத்தில் ஒருவரின் உறுப்புகளை தானமாக தர முன்வருவது, அதிலும் முகமறியா சிலரை காப்பாற்ற முன்வருவதற்கு மிகப்பெரிய மனசு வேண்டும்..

இந்த உடல் உறுப்பு தானம் என்பதே மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம்தான். அந்த வகையில் சித்ராவின் பெற்றோருக்கும் பரந்த மனசுதான்.. அதனால்தான் அவரை இணையவாசிகள் மனம் திறந்து வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்..

பெங்களூரு சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் - சசிகலா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு பெங்களூரு சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் - சசிகலா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

சித்ரா

சித்ரா

கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூரை சேர்ந்தவர் சித்ரா.. 25 வயதாகிறது.. இவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.. இதையடுத்து இரு வீட்டு குடும்பத்தினரும் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். வெகுவிமரிசையாக அந்த நிகழ்ச்சி தயாரானது.. ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.. மணமக்களும் மகிழ்ச்சியுடன் ரிசப்ஷனில் பங்கேற்றனர்..

 போட்டோக்கள்

போட்டோக்கள்

மணமக்கள் இருவருமே மேடையில் நின்று விதவிதமான போட்டோக்களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போதுதான், சித்ரா திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறி போன பெற்றோர்கள் சித்ராவை உடனடியாக பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்... ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், சித்ராவுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.. இதைக் கேட்டு குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்..

 உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்

பிறகு ஒருவழியாக தங்களை திடப்படுத்தி கொண்ட பெற்றோர், சித்ராவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர்.. இதையடுத்து, சித்ராவின் உடலிலிருந்து முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன... இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது.. இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினருக்கு பாராட்டுக்கள் குவிய ஆரம்பித்தது.. இதில், கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர், சித்ராவின் பெற்றோரை தொடர்பு கொண்டு மனதார பாராட்டு தெரிவித்தார்..

பாராட்டு

பாராட்டு

அதுமட்டுமல்லாமல், சித்ரா குறித்து ஒரு ட்வீட்டும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.. அதில், சித்ராவுக்கு அது மிகப் பெரிய நாள்.. மறக்க முடியாத நாள். ஆனால் விதி வேறு விதமாக விளையாடிவிட்டது.. இதயத்தை கிழிக்கும் இந்த துயரத்திலும், சித்ராவின் பெற்றோர், தங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானமாக அளித்துள்ளனர்.. இது பலரை வாழ வைக்கும்... மக்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இந்த பெற்றோர்கள் திகழ்ந்துள்ளனர்.. பாராட்டுக்குரிய செயல் என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Bride brain death at the wedding reception- body for donation in Karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X