பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிருப்தி எம்எல்ஏக்களை நடு தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.. சட்டசபையில் குமாரசாமி ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Crisis | சபாநாயகர் இப்படி பண்ணிட்டாரே.. அதிருப்தி எம்எல்ஏக்கள் கண்ணீர்- வீடியோ

    பெங்களூர்: அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜகவினர் தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர் என்று சட்டசபையில் முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசினார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடியூரப்பா தாக்கல் செய்து பேசிய பிறகு, பிற கட்சி தலைவர்கள் அதன் மீது உரையாற்றினர்.

    BS Yeddyurappas trust vote is illegal: HD Kumaraswamy

    இதில் குமாரசாமி பேசியதாவது: அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எடியூரப்பா நன்றி தெரிவித்து நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும்
    17 தகுதி நீக்க எம்எல்ஏக்களை கைவிட்டு விடாதீர்கள் என எடியூரப்பாவை கேட்டுக்கொள்கிறேன். நான் 14 மாதங்கள் அரசு நடத்தினேன். எடியூரப்பா கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு எந்த தேவையும் இல்லை. எனது மனசாட்சிக்கு நான் பதிலளிக்க வேண்டும். கடந்த 14 மாதங்களிலிருந்து, அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நான் என்ன வேலை செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.

    நீங்கள் சதி செய்து ஆட்சியை பிடித்துள்ளீர்கள். நாங்கள் ஆட்சியை கலைக்க முயற்சி செய்ய மாட்டோம். நீங்கள் எப்படி ஆட்சி நடத்தப்போகிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். நீங்கள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக விரோதமானது. இவ்வாறு குமாரசாமி பேசினார்.

    English summary
    HD Kumaraswamy, JD(S) in Vidhana Soudha: I ran govt for 14 months. I have no obligation to answer your (BS Yediyurappa) questions. I need to answer to my conscience. From past 14 months, everything was being recorded. People know what work I have done
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X