• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழர்கள் மீது தனி அன்பு.. கருணாநிதியின் 18 வருட சபதத்தை நிறைவேற்றிய எடியூரப்பா.. ஒரு ரீவைண்ட்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர், தமிழக அரசியல் தலைவரும் ஒருவருக்காக அவ்வளவு பெரிய கூட்டத்தை அதற்கு முன்பு கண்டிருக்கவில்லை.

  Political Journey Of B.S. Yediyurappa | Karnataka CM Resign | Explained

  கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே, "தலைவர் வாழ்க.." "கலைஞர் வாழ்க.." என்று திடீரென கோஷங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு எதிரொலிக்க தொடங்கியது. அப்போது, மேடைக்கு வந்தார் கருணாநிதி.

  அந்த விழாவின் போது நீண்ட உரையாற்றிய கருணாநிதி.. தனது 18 வருட சபதம் இன்று நிறைவேறி விட்டதாக உணர்வுபூர்வமாக அறிவித்தார்.

  கர்நாடக முதல்வர் பதவியை கர்நாடக முதல்வர் பதவியை "அழுகையுடன்" ராஜினாமா செய்த எடியூரப்பா.. ஏற்றுக் கொண்ட ஆளுநர்

  சாக்குப்பையில் திருவள்ளுவர் சிலை

  சாக்குப்பையில் திருவள்ளுவர் சிலை

  2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வேறு எதுவும் இல்லை.. தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம். 1991ம் ஆண்டு பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவருக்கு சிலை வடிக்கப்பட்டது. ஆனால், கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதை நிறுவ விடாமல் தடுத்தன. இதையடுத்து ஒரு சாக்கு பையை போட்டு திருவள்ளுவர் சிலை மூடி வைக்கப்பட்டது.

  கருணாநிதி சபதம்

  கருணாநிதி சபதம்

  அடுத்தடுத்து காங்கிரஸ் அரசாங்கங்கள் பதவியில் இருந்த போதிலும், திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கன்னட அமைப்புகளை பகைத்துக்கொள்ள எந்த அரசுக்கும் துணிச்சல் இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்தார் திமுக தலைவர் கருணாநிதி. திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறக்கும் வரை அங்கு நடைபெறும் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்தார்.

  எதிர்ப்பை பற்றி கவலைப்படாத எடியூரப்பா

  எதிர்ப்பை பற்றி கவலைப்படாத எடியூரப்பா

  2009 ஆம் ஆண்டு முதல் முறையாக எடியூரப்பா முதல்வரான அந்த காலகட்டத்தில்.. திருவள்ளுவர் சிலையை திறந்து வைப்பேன் என்று அறிவித்தார். கன்னட அமைப்புகள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், எதைப்பற்றியும் எடியூரப்பா கவலைப்படவில்லை. இருமாநில மக்களும் அண்ணன்-தம்பிகளாக இருக்க வேண்டும். அதற்கு திருவள்ளுவர் சிலை திறப்பு ஒரு பாலமாக அமைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

  பிடிவாதக்காரர் எடியூரப்பா

  பிடிவாதக்காரர் எடியூரப்பா

  கொள்கை பிடிப்பு என்பது எடியூரப்பாவின் பிறவிக்குணம். கர்நாடகாவில் பூஜ்யம் என்ற அளவில் இருந்த பாஜகவை, ஆளும் கட்சி அளவுக்கு கொண்டு வந்தவர் அவர். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது, எடியூரப்பா பேச ஆரம்பித்தால், சட்டசபையே நடுங்கும் என்பது ஆளும் கட்சியினரின் வாயிலிருந்தே வந்த வார்த்தைகள்.

  சிறப்பு விருந்தினர் கருணாநிதி

  சிறப்பு விருந்தினர் கருணாநிதி

  எடுத்த முடிவில் இருந்து ஒரு இன்ச் அளவுக்கு கூட பின் வாங்கும் குணம் இல்லாதவர் எடியூரப்பா என்பது கர்நாடக அரசியல் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் இந்த உறுதியை அவர் காண்பித்தார். இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் நடைபெற்ற அந்த விழாவில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது நடந்த நிகழ்வுகள்தான், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் தெரிவித்த விஷயங்கள்.

  கருணாநிதியை அண்ணன் என்ற எடியூரப்பா

  கருணாநிதியை அண்ணன் என்ற எடியூரப்பா

  தனது 18 வது வருட சபதம் நிறைவேறியதாக குறிப்பிட்ட கருணாநிதி, எடியூரப்பாவை தனது தம்பி என்றழைத்தார். பதிலுக்கு கருணாநிதி, என்னுடைய அண்ணன் என்று எடியூரப்பாவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அன்று முதல் இன்று வரை பெங்களூர் நகரத்தில் ஒரு அடையாளமாக மாறிவிட்டது திருவள்ளுவர் சிலை. திறந்து வைத்தோம், தமிழர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்தோம் என்பதோடு மட்டும் கிடையாது, ஆண்டுதோறும் பொங்கலை ஒட்டி நடைபெறும் விழாவின்போது திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். அப்போது எடியூரப்பா கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்.

  நீண்ட கால நட்பு

  நீண்ட கால நட்பு

  இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தவறியது கிடையாது. ஆனால், "விதை எடியூரப்பா போட்டது." திருவள்ளுவர் சிலை திறப்புக்கு பிறகுதான் எடியூரப்பா மற்றும் தமிழ் அமைப்புகள் இடையே இணக்கம் ஏற்பட்டது என்று கிடையாது. அது நீண்ட கால பிணைப்பு. எடியூரப்பாவின் சொந்த மாவட்டம் ஷிமோகா. அந்த மாவட்டத்தின் பத்ராவதி உள்ளிட்ட பல்வேறு தாலுகாக்களில் நீண்ட காலத்துக்கு முன்பாக சென்று குடியேறிய தமிழ் குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. ஷிமோகா தமிழ்ச்சங்கம் நிர்வாகிகளுடன் எடியூரப்பாவுக்கு நீண்டகால உறவு இருந்தது .

  தமிழர்களின் நண்பன்

  தமிழர்களின் நண்பன்

  திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது ஷிமோகா மாவட்டத்தில் இருந்து ஏராளமான தமிழர்கள் பெங்களூர் வந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று எடியூரப்பாவின் கைகளை பிடித்து சிரித்து மகிழ்ந்தனர். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரங்களில் தமிழகத்துடன் முரண்பாடுகள் ஏற்படும் போது பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளிலும் கன்னட அமைப்பினர் தமிழ் பகுதிகளில் போராட்டம் நடத்துவார்கள். பொதுவாக எடியூரப்பா ஆட்சியில் இருந்தால் தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது கிடையாது. தமிழர் பாதுகாப்பில் மிகவும் கவனம் செலுத்தியது வரலாறு. எனவேதான் எடியூரப்பாவை கட்சி பாகுபாடு தாண்டி கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் அனைவரும் உற்ற நண்பனாக பார்க்கிறார்கள். அவரும் இதுவரை அப்படித்தான் நடந்து கொண்டு வந்துள்ளார். அவருக்கு கட்சி இனிமேல் எந்த பதவி கொடுத்தாலும் சரி, அங்கிருந்தபடி அவர் தமிழர்களுக்கு அரணாக இருக்க வேண்டும் என்பதுதான் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

  English summary
  BS Yediyurappa was the reason behind unveiling Thiruvalluvar statue in Bangalore. Then CM of Karunandhi was attended the function in 2009.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X