பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பலான சிடியை தொடர்ந்து.. எடியூரப்பாவுக்கு தலைவலி.. போர்க்கொடி உயர்த்தும் எம்எல்ஏக்கள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் அமைச்சரவை விஸ்தரிப்பு நடந்தாலும் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான அதிருப்தி அலை மட்டும் ஓயவில்லை. அமைச்சர் பதவிகள் கிடைக்காதவர்கள் மொத்த அமைச்சரவையையும் மாற்றியமைக்க போர்க்கொடி உயர்த்துகிறார்கள்.

சுமார் 15 பாஜக எம்எல்ஏக்கள் எடியூரப்பாவுக்கு எதிராக திரண்டுள்ளதாக பெங்களூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்வரானார் எடியூரப்பா.

முந்தைய காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கலைந்து இவர் ஆட்சியை பிடித்தார். எனவே 40 மாதங்கள்தான் பதவிக்காலம் உள்ளது.

 "அந்த மாதிரி" கோலத்தில் எடியூரப்பா.. சிக்கிய சிடி.. மிரட்டி, மிரட்டியே.. பாஜக சீனியர்கள் பகீர்!

 20 மாதங்கள்

20 மாதங்கள்

மார்ச் மாதத்தோடு 20 மாதங்கள் நிறைவடையப்போகிறது. எனவே, மொத்த அமைச்சரவையையும் 20வது மாத துவக்கத்தில் மாற்றி, இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்பது அதிருப்தியாளர்கள் கோரிக்கையாக உள்ளது.

மேலிடத்திடம் புகார்

மேலிடத்திடம் புகார்

விரைவிலேயே இதுபற்றி பாஜக மேலிடத்திடம் புகார் தெரிவிக்கப்போவதாக அதிருப்தியாளர்கள் சிலர் ஓப்பனாக சொல்லி வருகிறார்கள். 6 முறை எம்எல்ஏவான பாஜக சீனியர் திப்பாரெட்டி, சித்ரதுர்கா தொகுதியைச் சேர்ந்தவர். அவர் அளித்த பேட்டியில் தனது மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அமைச்சர் பதவி கொடுத்தால்தான் அதை ஈடு செய்ய முடியும் என்கிறார்.

வெற்றி

வெற்றி

அடுத்த சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால், புதியவர்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும். எப்போது ஆட்சிக்கு வந்தாலும் ஒரே செட் ஆட்கள்தான் அமைச்சராக்கப்படுவது நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா தலைவலி

எடியூரப்பா தலைவலி

ராய்ச்சூர் எம்எல்ஏ சிவனகவுடா நாயக் கூறுகையில், சுமார் 15 எம்எல்ஏக்கள், என்னிடம் போனில் தொடர்பில் உள்ளனர். விரைவில் மேலிடத்தை சந்தித்து குறைகளை கூறுவோம். இதில் தவறு இல்லை என்று அவர் கூறினார். எனவே கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு தலைவலி ஓய்ந்தபாடில்லை.

ஏற்கனவே எடியூரப்பா ஒரு மாதிரி கோலத்தில் இருக்கும் சிடி வெளியாகியுள்ளதாக சில பாஜக எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். அந்த சிடியை காட்டி மிரட்டிதான் சிலர் அமைச்சர் பதவி பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Trouble brews for Karnataka Chief Minister BS Yediyurappa as rebelling MLAs openly start speaking out about their unhappiness at being kept out of the cabinet during the recent expansion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X