பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹிஸ்டரி சரியில்லையே.. 15 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கும் கெட்ட நேரம்.. பாஜக தப்புமா?

கர்நாடகத்தில் நடக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    பெங்களூர்: கர்நாடகத்தில் நடக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி மாறி போட்டியிட்டவர்களின் இடைத்தேர்தல் வரலாறு பாஜகவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி அளித்துள்ளது.

    கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான். ஆனால் சபாநாயகர் இதற்காக நீண்ட காலம் எடுத்தது தவறு.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிடலாம். அதற்கு தடை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

     17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும், ஆனால் இடைத் தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும், ஆனால் இடைத் தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி

    ஏன் தகுதி நீக்கம்

    ஏன் தகுதி நீக்கம்

    இந்த 17 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கி பதவி விலகினார்கள். இதனால் அப்போதைய சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் இந்த 17 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதற்கு எதிரான வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

    தேர்தலில் போட்டி

    தேர்தலில் போட்டி

    இந்த நிலையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்த 17 பேரும் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார்கள்.

    என்ன கேள்வி

    என்ன கேள்வி

    இந்த 15 தொகுதி இடைத்தேர்தல்தான் தற்போது கர்நாடகாவில் ஆட்சியை தீர்மானிக்க போகிறது. கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 இடங்கள் உள்ளது. இங்கு பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை. தற்போது காலி இடங்கள் 17 உள்ளதாக 207 எம்எல்ஏக்கள்தான் இருக்கிறார்கள்.

    எவ்வளவு இடங்கள்

    எவ்வளவு இடங்கள்

    இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 104 இடங்கள் போதும். தற்போது 106 இடங்களுடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் 15 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை. இதனால் பாஜக 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 6-7 இடங்களில் வெல்ல வேண்டும்.

    காங்கிரஸ் எவ்வளவு

    காங்கிரஸ் எவ்வளவு

    இதில் காங்கிரஸ் கட்சிக்கு 66 எம்பிக்கள் உள்ளனர். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 34 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏ இருக்கிறார். ஆகவே இந்த இடைத்தேர்தல் ஆட்சியை நிர்ணயிக்கும் இடைதேர்தலாக இருக்க போகிறது.

    வரலாறு என்ன சொல்கிறது

    வரலாறு என்ன சொல்கிறது

    ஆனால் கடந்த கால வரலாறுகள் பாஜகவிற்கு சாதகமாக இல்லை. உதாரணமாக குஜராத்தில் காங்கிரஸ் சார்பாக ரத்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ அல்பேஷ் தாக்குர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலை சந்தித்தார். ஆனால் இவர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.

    தோல்விதான் வரலாறு

    தோல்விதான் வரலாறு

    அதேபோல் கடந்த லோக்சபா தேர்தலில் கடைசி நேரத்தில் கட்சி தாவிய, 47 பேர், தோல்வியை தழுவினார்கள். அதேபோல் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஸ்ரீனிவாஸ் தாதாசாகேப் பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து போட்டியிட்டார். ஆனால் அவரும் தோல்வி அடைத்தார்.

    முக்கிய உறுப்பினர்

    முக்கிய உறுப்பினர்

    அதேபோல் சில மாதங்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர் உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தார். தன்னுடைய சத்தாரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தார். உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் மாரத்தா அரசின் 13வது சத்திரபதியாக உதயன்ராஜே போஸ்லேதான் முடி சூடினார்.

    தோல்வி அடைந்தார்

    தோல்வி அடைந்தார்

    அதோடு மீண்டும் அதே சத்தாரா தொகுதியில் உதயன்ராஜே போஸ்லே பாஜக சார்பாக இந்தமுறை நின்றார். இவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பாக அங்கு ஸ்ரீனிவாஸ் பாட்டீல் நின்றார். கடைசியில் உதயன்ராஜே போஸ்லே சத்தாரா தொகுதியில் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் பாட்டீலிடம் தோல்வி அடைந்தார்.

    கேள்விகள் எழுகிறது

    கேள்விகள் எழுகிறது

    இதனால் பாஜக இடைத்தேர்தலில் கர்நாடகாவில் வெற்றிபெறுமா. 15 எம்எல்ஏக்கள் மீண்டும் பதவியை பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    By-elections history may give a shock to BJP party at 15 seats in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X