பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாரி, ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதிய கான்வாய் கார்.. எடியூரப்பா, செயலாளர் செல்வகுமார் தப்பினர்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பாதுகாப்பு வாகனம் லாரி மற்றும் ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதிய சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. முதலமைச்சர் எடியூரப்பா அப்போது, தும்கூர் நகரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எடியூரப்பாவின் பாதுகாப்பு கான்வாய் கார் ஒன்று, அதன் டிரைவரின், கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதி, பிறகு ஒரு லாரி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது மோதியுள்ளது.

Car in Karnataka CM Yediyurappa’s convoy rams into vehicles, two injured Bengaluru

"இந்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை, ஆனால் ஆட்டோ டிரைவர் மற்றும் கார் டிரைவர் காயமடைந்தனர்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார் என பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கட்சி, ஜாதி, மத பேதமின்றி பொறுப்பாக வாக்களிக்க வேண்டும்.. ஜக்கி வாசுதேவ் அட்வைஸ்!கட்சி, ஜாதி, மத பேதமின்றி பொறுப்பாக வாக்களிக்க வேண்டும்.. ஜக்கி வாசுதேவ் அட்வைஸ்!

ஆட்டோவில் மோதிய அந்த கான்வாய், கார், எடியூரப்பாவின் செயலாளரான, தமிழகத்தை சேர்ந்த கர்நாடக பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி செல்வகுமாருக்கு ஒதுக்கப்பட்டதாகும். ஆனால், நல்லவேளையாக, விபத்து நடந்தபோது செல்வகுமார் முதல்வருடன், அவரது காரில் பயணித்துக் கொண்டிருந்தார். எடியூரப்பாவுக்கு அவர் ஆலோசனைகள் வழங்கியபடி இருந்தார். எனவே செல்வகுமாருக்கு காயம் ஏற்படவில்லை.

English summary
Two people were injured after a car in Karnataka Chief Minister B S Yediyurappa's convoy rammed into a truck before hitting an auto rickshaw on Tuesday at Yashwantpur here, police said. The chief minister was heading towards Tumakuru on Tuesday morning when the incident occurred, they said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X