பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை

Google Oneindia Tamil News

பெங்களூரு: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தன்னார்வ அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனலுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி உதவி தொடர்பாக சில ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்னஸ்டியின் பெங்களூரு அலுவலகத்தில் கடந்த ஆண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

CBI conducts raids at office of Amnesty International in Bengaluru

அப்போது, வெளிநாடுகளில் இருந்து ஆம்னஸ்டி நிதி உதவி பெற மத்திய அரசு அனுமதி மறுத்த நிலையிலும் வெளிநாட்டு நிதி உதவியை அது பெற்று வந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது என அமலாக்கப் பிரிவு தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான் பெங்களூரு ஆம்னஸ்டி அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இதுவும் வெளிநாட்டு நிதி விவகாரம் குறித்துதான் எனவும் கூறப்படுகிறது.

English summary
Central Bureau of Investigation (CBI) team conducted a raid on Amnesty International Group in Bengaluru, in connection with violation of Foreign Contribution Regulation Act (FCRA).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X