பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிசிடி சித்தார்த்தா உடல் தகனம்.. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கண்ணீர் அஞ்சலி!

சிசிடி சித்தார்த்தாவின் உடல் சேத்தனஹள்ளியில் இருக்கும் அவரது எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: சிசிடி சித்தார்த்தாவின் உடல் சேத்தனஹள்ளியில் இருக்கும் அவரது எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது. சிசிடி ஊழியர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் அவரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாட்டு முழுக்க பறந்து விரிந்து வளர்ந்து நிற்கும் காபி ஷாப் நிறுவனமான கஃபே காபி டே நிறுவனத்திற்கும் இன்று மிக மோசமான நாள். நேற்று முதல்நாள் காணாமல் போன சிசிடி நிறுவனர் சித்தார்த்தா, இன்று நேத்ராவதி நதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று முதல்நாள், ''நான் ஒரு தொழில் அதிபராக தோல்வி அடைந்துவிட்டேன்'' என்று கூறி, லெட்டர் எழுதிவிட்டு, சொத்து விவரங்களை தன்னுடைய லெட்டருடன் இணைத்துவிட்டு, விஜி சித்தார்த் காணாமல் போனார். கர்நாடக மாநிலம் சிக்மங்களூரில் நடக்கும் பிஸ்னஸ் மீட் ஒன்றில் கலந்து கொள்ள சென்ற அவர், மங்களூரில் பாதியில் இறங்கி பின் மாயமானார்.

என்ன

என்ன

ஜெப்பினா மோகரூ என்ற மங்களூருக்கு அருகே இருக்கும் இடத்தில் உள்ள உல்லால் பாலத்தில் இருந்து கீழே விழுந்து இவர் தற்கொலை செய்து கொண்டது இன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் உடலை போலீசார் உட்பட மீட்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர். 36 மணி நேரமாக தேடப்பட்ட இவரின் உடல் இன்று அதிகாலை மீனவர்கள் மூலம் நேத்ராவதியின் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை நடந்தது

பிரேத பரிசோதனை நடந்தது

இதையடுத்து வேகமாக அவரின் உடல் வென்லாக் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அஞ்சலிக்காக சிக்மங்களூரில் உள்ள அவரின் எஸ்டேட்டில் வைக்கப்பட்டது. இவரின் உடலுக்கு சிசிடி ஊழியர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் அவரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

முன்னாள் முதல்வர் மற்றும் மஜத மாநில தலைவர் குமாரசாமி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மஜத தேசிய தலைவர் எச் டி தேவகவுடா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதேபோல் மாணவர்கள், பொதுமக்கள் பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

தகனம் செய்யப்பட்டது

தகனம் செய்யப்பட்டது

இதையடுத்து சிசிடி நிறுவனர் சித்தார்த்தா உடல் தகனம் செய்யப்பட்டது. சேத்தனஹள்ளியில் இருக்கும் சித்தார்த்தா எஸ்டேட்டில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் அமர்த்தியா இறுதி மரியாதையை செலுத்தினார். பலநூறு பேர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

English summary
CCD founder Siddhartha's body buried at one of his coffee estates in Chethanahalli Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X