பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் சரி.. முக்கிய விஷயத்தை போலீஸ் மறைப்பது ஏன்? சித்தார்த் மாயத்திற்கு பின்னிருக்கும் மர்மம்!

சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போனதற்கு பின் நிறைய மர்மங்கள் நிலவி வருவதாக தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Coffee Day Owner VG Siddhartha : காபி டே ஓனர் சித்தார்த்தா எழுதிய கடைசி கடிதம் சிக்கியது- வீடியோ

    பெங்களூர்: சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போனதற்கு பின் நிறைய மர்மங்கள் நிலவி வருவதாக தெரிகிறது. போலீஸ் இதில் முக்கிய விஷயம் பலவற்றை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போய் இதோடு 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் இவர் காணாமல் போனதில் இன்னும் எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை.

    அதே சமயம் இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஜெப்பினா மோகரூ பாலத்திற்கு கீழ் இருக்கும் நேத்ராவதி ஆற்றில் இவர் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    முக்கிய புள்ளி மிரட்டினார்? போலீசுக்கு கிடைத்த க்ளூ.. சித்தார்த் காணாமல் போகும் முன் நடந்தது என்ன? முக்கிய புள்ளி மிரட்டினார்? போலீசுக்கு கிடைத்த க்ளூ.. சித்தார்த் காணாமல் போகும் முன் நடந்தது என்ன?

    ஜெப்பினா மோகரூ எப்படி

    ஜெப்பினா மோகரூ எப்படி

    இதனால் அந்த நேத்ராவதி ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. காலையில் இருந்து போலீசார் தொடங்கி பல்வேறு தனியார் அமைப்பினரும் இந்த பகுதியில் தீவிரமாக தேடி வருகிறார்கள். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே விஜி சித்தார்த் இப்படி தவறான முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பே விஜி சித்தார்த் மிக முக்கியமான பொருளாதார பிரச்சனை ஒன்றில் சிக்கினார் என்றும் சிசிடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விஜி சித்தார்த்துக்கு மைன்ட் ட்ரீ நிறுவனத்திடம் இருந்து அழுத்தம் வந்துள்ளது. அங்கு இவரின் பங்குகள் இருந்துள்ளது. இதை விற்க நினைத்ததில் பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மூன்று நாள்

    மூன்று நாள்

    அதன்படி 27ம் தேதியே இவருக்கு சிலர் போன் செய்து அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். இவர் வரி தாக்கல் செய்ததில் முறைகேடு இருப்பதாக சிலர் மிரட்டி இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக 27ம் தேதியே விஜி சித்தார்த் இந்த கடிதத்தை எழுதிவிட்டார். ஆம் அவரின் கடிதம் 27ம் தேதியே எழுதப்பட்டுள்ளது. அப்போதே இவர் மாயமாகும் (அல்லது தற்கொலை) முடிவிற்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

    என்ன சொத்து

    என்ன சொத்து

    அதேபோல் தன்னுடைய சொத்துக்கள், பங்குகளை யாருக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தின் பின் பக்கம் எழுதியுள்ளார். மூன்று பக்கங்களில் அவர் இந்த விவரங்களை இணைத்துள்ளார். ஆனால் இந்த இரண்டு முக்கியமான விஷயங்களையும் போலீசார் தொடர்ந்து மறைத்து வருகிறார்கள். அந்த பங்கு குறித்த கடிதத்தை போலீஸ் வெளியிடவில்லை. போலீசார் அதை பற்றி பேசாமல் தவிர்த்து வருகிறார்கள்.

    என்ன மர்மம்

    என்ன மர்மம்

    மூன்று நாட்களுக்கு முன்பே கடிதம் எழுதி இருந்தால், 27ம் தேதி என்ன நடந்து இருக்கும். அவர் பங்குகளை விற்க அழுத்தம் அளித்தது யார் என்று பல்வேறு சிக்கல்கள், மர்மங்கள் தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    CCD: Something terrible thing has happened to Siddhartha three days ago as per his letter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X